spot_img
September 8, 2024, 7:35 am
spot_img

Ooops... Error 404

Sorry, but the page you are looking for doesn't exist.

வணிக நடவடிக்கையாக இருப்பினும் சேவை குறைப்பாட்டுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – தேசிய நுகர்வோர் ஆணையம்

கிளாக்ஸோ ஸ்மித்க்லைன் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் நிறுவனம் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தீர்ப்பின் மீது சீராய்வு மனுவை கடந்த 2012 ஆம் ஆண்டு தாக்கல் செய்தது. பங்கு பரிவர்த்தனை பிரச்சனை கம்பெனியில் சட்டப்படி தீர்க்கப்பட வேண்டியது என்பதாலும் வணிக ரீதியிலான பரிவர்த்தனையை விசாரிக்க நுகர்வோர் சட்டத்தில்  இடம் இல்லை என்பதாலும் வழக்கு தாக்கல் செய்தவர்களின் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் நிறுவனம் வாதிட்டது.

விபத்துக்குள்ளான காரின் உரிமையாளருக்கு ரூ 80,000/- வழங்க இன்சூரன்ஸ்நிறுவனத்துக்கு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

காரில் ஏற்பட்ட சேதத்திற்கான முழு தொகையையும் வழங்க தவறியதால் இன்சூரன்ஸ் நிறுவனம் மீது காரின் உரிமையாளர் கடந்த 2023 பிப்ரவரி மாதத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இன்சூரன்ஸ் நிறுவனம் முழு தொகையையும் காரின் உரிமையாளருக்கு வழங்காதது சேவை குறைபாடு என்று 2024 செப்டம்பர் 4 அன்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

எதிர்தரப்பினர் ஆஜராகாத போதும் எதிர் தரப்பினர் மீது நுகர்வோர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

நுகர்வோர் நீதிமன்றங்களில் நுகர்வோர் வழக்குகள் 90 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று  நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் தெரிவிக்கிறது. இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் எதிர் தரப்பினர் ஆஜராகாமல் இருந்த போதிலும் கூட இரண்டு ஆண்டுகள் கழித்து   தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய காலதாமதத்திற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு முற்றிலும் நீக்கப்பட வேண்டும் என்பதே நுகர்வோர் ஆர்வலர்களின் ஆசையாக இருக்கிறது. மேலும், நுகர்வோர் தாக்கல் செய்யும் வழக்குகளை எவ்வாறு நிரூபிப்பது என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டியதும் அவசியமாகும்.

ஆன்லைன் பர்சேஸ் மூலமாக விலைவாசி உயர்வு உள்ளிட்ட இத்தனை பிரச்சனைகள் உருவாக்குகிறதா? மத்திய அமைச்சரே வருத்தப்படுகிறார்.

ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யும் நிறுவனங்களை நெறிப்படுத்தாவிட்டால் (regulate) வருங்காலத்தில் அபரிமிதமான விலைவாசி உயர்வு, சில்லரை வணிகர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை, இந்தியாவின் பணம் வெளிநாட்டுக்கு செல்லுதல் உள்ளிட்ட பல சவால்களை மேற்கொண்டு சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றால் மிகையாகாது. மேலும், ஆன்லைன் வணிக இணையதளங்களில் பொருட்களை வாங்கி பிரச்சனை ஏற்படும் போது ஆன்லைன் வணிக இணையதளங்கள் தாங்கள் ஒரு   மீடியேட்டர் மட்டுமே செயல்படுகிறோம் என்றும் தங்கள் இணையதளம் மூலம் வாங்கப்பட்ட பரிவர்த்தனையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்றும் தெரிவிக்கின்றன. இத்தகைய சூழல்களில் இருந்து நுகர்வோரை பாதுகாக்க தகுந்த சட்டம் இயற்றலும் அதனை அமலாக்கம் செய்வதும் நெறிமுறைக்கான அமைப்பை ஏற்படுத்துவதும் தற்போதைய காலத்தின் தேவையாக உள்ளது.

சைவ உணவிற்கு பதிலாக அசைவ உணவு டெலிவரி, ரூ 5 லட்சம் இழப்பீட்டை ரூ 50 லட்சமாக உயர்த்தி உத்தரவு, புற்றுநோயை மறைத்து பெறப்பட்ட இன்சூரன்ஸ் பாலிசி

மகளின் உயிருக்கு மதிப்பு இவ்வளவுதானா? என்று அதிர்ச்சி அடைந்த நிர்மலா குமாரி தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு (First Appeal No. 2515 of  2017)  செய்தார். கடந்த 2024 ஜூலை 11 அன்று, தேசிய நுகர்வோர் ஆணையம் வழங்கிய தீர்ப்பில் இன்சூரன்ஸ் நிறுவனம் பணத்தை உரிய நேரத்தில் வழங்காமல் நடைமுறைகளை காரணம் காட்டி கால தாமதம் செய்தது சேவை குறைபாடு என்றும் நடந்த சேவை குறைபாட்டிற்கு ஏற்ப இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நிலையில் குறைந்த இழப்பீட்டை மாநில நுகர்வோர் ஆணையம் வழங்கியது தவறு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளருக்கு ரூபாய் 50 லட்சத்து 75 ஆயிரத்தை இழப்பீடாக வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தவறான தகவலை கூறி காசோலையை திருப்பிய வங்கி வாடிக்கையாளருக்கு ரூ 50,000/- வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

வங்கியின் பதிலில் திருப்தி அடையாத ரவிச்சந்திரன் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் காசோலையை பணம் இருந்தும் திருப்பி அனுப்பிய வங்கி மீது வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு கடந்த 27 ஆகஸ்ட் 2024 -ல் தீர்ப்பு வழங்கியது.

வணிகப் பயன்பாட்டுக்காக பொருளை வாங்கியுள்ளதால் நுகர்வோர் நீதிமன்றங்கள் விசாரிக்க கூடாது என எல்லா சமயங்களிலும் விற்பனையாளர் வாதிட முடியாது- உச்ச நீதிமன்றம்

வீட்டை விற்பனை செய்வதாக வாக்குறுதி அளித்து முன்பதிவு மேற்கொண்ட ஓம்கார் நிறுவனம் வீட்டை வாங்க முன்பதிவு செய்த குஷல்ராஜ் நிறுவனத்திற்கு ரூபாய் மூன்று கோடியை   இரண்டு வாரங்களுக்குள் வழங்கவும் 2024 டிசம்பர் மாத இறுதிக்குள் மீத தொகையான ரூ 4,16,41,493/- ஐ வழங்கவும் வீட்டை முன் பதிவு செய்தவர் செலுத்திய ஒவ்வொரு தவணை தொகைக்கும் பணம் செலுத்தப்பட்ட நாளிலிருந்து பணம் வழங்கப்படும் நாள் வரை ஆண்டொன்று ஒன்பது சதவீத வட்டி வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாகன உரிமையாளர் விபத்து காப்பீட்டை பெற (பெர்சனல் ஆக்சிடென்ட் கவரேஜ்இன்சூரன்ஸ்) நுகர்வோர் நீதிமன்றத்தை அணுக வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவு

வாகன விபத்துகளில் பாதிக்கப்படும் மூன்றாம் நபர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான பிரச்சனைகளை மட்டுமே வாகன விபத்து காப்பீட்டு தீர்ப்பாயம் விசாரிக்க முடியும் என்றும் வாகன விபத்தில் வாகன உரிமையாளர் பாதிக்கப்பட்டால் அவரால் கேட்கப்படும் இழப்பீடு குறித்த பிரச்சினைகளை விசாரிக்க வாகன விபத்து காப்பீட்டு   தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் இன்சூரன்ஸ் நிறுவனம் கீழ் நீதிமன்றத்தில் வைத்த வாதத்தை   கீழமை நீதிமன்றம் நிராகரித்துள்ளது தவறானதாகும். வாகன விபத்துகளில் வாகனத்தின் உரிமையாளர் பாதிக்கப்பட்டால் அவருக்கான இன்சூரன்ஸ் கோரிக்கைகளை நுகர்வோர் நீதிமன்றத்தில் மட்டுமே கேட்டு பெற முடியும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles