செய்திச்சோலை
செய்திக்கட்டுரைகள்
நுகர்வோர் பூங்கா
தகவல் களம்
ஆய்வுகள்
சிறப்பு படைப்புகள்
மருத்துவரின் கவனக்குறைவான சிகிச்சைக்கு பொறுப்பேற்று பாதிக்கப்பட்டவருக்கு ரூபாய் 10லட்சம் மருத்துவமனை நிர்வாகம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு
காமினேனி மருத்துவமனையில் சிவ பிரசாத்தை எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஜெபிஎஸ் வித்தியாசாகர் என்பவர் பரிசோதனை செய்து 2006 டிசம்பர் 7ஆம் தேதி அன்று அவருக்கு எலும்பு முறிவை சரி செய்ய அறுவை சிகிச்சை (surgery) செய்துள்ளார். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தொடர் மருத்துவ சிகிச்சையில் சிவப்பிரசாத் இருந்த நிலையில் கடந்த 2006 டிசம்பர் 12 அன்று மாலை 4 மணிக்கு இறந்து விட்டதாக அன்று மாலை 5 மணிக்கு சிவபிரசாத்தின் தந்தையிடம் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவால்களை சமாளிக்க நேர்மையாளர்கள் ஒருங்கிணைய வேண்டும் – லோக் ஆயுக்தா நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ்
இத்தகைய தன்னார்வ சங்கங்கள் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டும் சாதி, மதம் போன்ற வட்டங்களுக்கு அப்பாற்பட்டும் இயங்குவதாக இருக்க வேண்டும். இவற்றை வழிநடத்த நேர்மையான இளைஞர்கள் முன் வர வேண்டும். இதன் மூலம் நாட்டில் நிலவும் ஊழலை ஒழிக்க இயலும்.
நாம் சாப்பிடும் உணவில் இவ்வளவு தீங்குகளா? தர்பூசணி உள்ளிட்ட இயற்கை உணவுகளை அழிக்க சதியா? உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த...
இயற்கையாக விளையும் உணவு பொருட்களையும் பழங்களையும் காய்களையும் உணவுக்காக பயன்படுத்தும் கலாச்சாரத்திலிருந்து மாறி செல்ல வேண்டாம் பாக்கெட்டில் அடைத்து வைக்கப்படும் ரெடிமேட் உணவுகளுக்கும் குடிநீருக்கும் அதிக விலை கொடுத்து வாங்குவதை தவிர்ப்போம் விவசாயிகளின் உற்பத்தி பொருள்களுக்கு எதிரான பிரச்சாரத்தை முறியடிப்போம் இதன் மூலம் கொள்ளை இலாபம் ஈட்டும் கார்ப்பரேட் கம்பெனிகளின் சதிகளை தகர்த்தெறிவோம் என்கிறார் நாமக்கல் ஏ. டி. கண்ணன்.
நரகத்தில் வேலை நிறுத்தங்கள், போராட்டங்கள், பேரணிகள்
எனக்கு கிறுக்கு பிடித்து விடும் போல் இருக்கிறது. நீங்கள் தான் என்னை காப்பாற்ற வேண்டும். ஒரு மாதம் அவரை சொர்க்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள்,, பிளீஸ்,, என்றது சாத்தான். புனித பீட்டர் மறுத்து விட்டார். "என்ன விளையாடுகிறாயா? தேவதைகள், கடவுளுக்கு நடுவே நாத்திகவாதியா? சிரமமாயிற்றே" என்றார். "ஒரே ஒரு மாதம், பிளீஸ்" என்ற சாத்தானின் விடாப்பிடியான வேண்டுகோளால், வேறு வழியின்றி ஒத்துக் கொண்டார் புனித பீட்டர்.
காலப்போக்கில் நாமும் வயதாகிவிடுவோம் – மனதைத் தொட்ட உண்மை சம்பவம் ஒரு நிமிடம் படித்து உணருங்கள்
இதைப் பார்த்து என் மனைவி என்னைப் பார்த்து கத்தினாள். நான் என் அப்பாவைக் கத்தினேன், அவரிடம் முரட்டுத்தனமாகப் பேசினேன், நடக்கும்போது சுவர்களைத் தொடாதே என்று அறிவுறுத்தினேன். அவர் காயமடைந்ததாகத் தோன்றியது. என் நடத்தையைப் பார்த்து நானும் வெட்கப்பட்டேன். ஆனால், அவரிடம் எதுவும் சொல்லவில்லை.