spot_img
January 3, 2025, 7:34 am
spot_img

உஷார்! முறையற்ற உணவு பழக்கத்துக்கு வழி வகுக்கும் ஆன்லைன் உணவு – சட்டக் கல்லூரி மாணவிகள் அலசுகிறார்கள்

ஆசையை தூண்டும் வகையில் போலி உணவு படங்கள்-சத்யா, சட்டக் கல்லூரி மாணவி

ஆன்லைன் உணவு உபயோகிக்கும் முறை சமீப காலத்தில் இயல்பான ஒன்றாக உள்ளது. வீட்டிலிருந்தே விரும்பிய உணவினை வரவழைத்துக் கொள்வது எளிமையான ஒன்றாக இருந்தாலும் அதில் உள்ள தீமைகளை கருத்தில் கொள்வது அவசியமானதாகும்.

எங்கோ உணவு தயார் செய்து பார்சல் செய்யபடுவதால், உணவு எவ்வாறு செய்யப்படுகிறது? எப்பொழுது செய்யப்பட்டது? என்பது தெரிவதில்லை. சில  சமையங்களில் பழைய உணவுகள் சூடுபண்ணி அனுப்பபடுகிறது. சாதாரணமாக விற்கும் விலையை விட ஆன்லைன் உணவு அதிக விலைக்கு விற்பனை செய்ய படுகிறது. மேலும் அவற்றை வழங்குவதற்கான கட்டணம் என்று அதற்கென தனி விலை நிர்ணயிக்கப்படுவதால் ஒரு வேளை உணவின் விலை ஒரு நாளின் உணவு விலைக்கு சமமாக உள்ளது. 

ஆன்லைன் பக்கங்களில் ஓட்டலின் உண்மைதான படங்கள் இல்லாமல் ஆசையை தூண்டும் வகையில் உணவு படங்கள் ஓட்டலின் படங்கள் போலியாக பதிவேற்றம் செய்யப்படிருக்கும். அதனை பார்த்து அங்கு உணவினை ஆர்டர் செய்து ஏமாறும் வாய்ப்பு உள்ளது. உணவுகள் தொலை தூரத்துக்கு கொண்டு செல்லப்படுவதால் செய்யப்படுவதால் அவை பாதுக்காப்பாக இருக்க பெரும்பாலும் நெகிழி காகிதம் பெட்டிகள் மட்டுமே  பயன்படுத்தபடுகிறது.       ஆன்லைனில் நாம் பணம் செலுத்தி ஒருவகை உணவை கேட்கும் போது வேறு வகையான உணவும் டெலிவரி செய்யப்படுகிறது.

பெரும்பாலும் ஆன்லைன் உணவு விற்பனையில் பெரிய பெரிய உணவு விடுதிகள் மட்டுமே இடம் பெறுவதால் சுய தொழில் செய்யும் சிறு உணவு கூடங்கள் கடைகள் பாதிக்கப்படுகின்றது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

பூங்கா இதழ் – நுகர்வோர் பூங்கா இணைய இதழ்களின் படைப்புகளை படிக்க விரும்பினால் இணைய இங்கே தொடவும் (Click Here!)

முறையற்ற உணவு பழக்கத்துக்கு வழி வகுத்த ஆன்லைன் உணவு- ஆர். லக்ஷிதா, சட்டக் கல்லூரி மாணவி

கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் உணவு விநியோகம் அசுர வளர்ச்சி பெற்றது. பின்னர் ஆன்லைன் உணவு முறைக்கு மக்கள் அடிமையாகி விட்டனர். 24×7 உணவு விநியோக வசதி இருப்பதால் எந்த நேரம் வேண்டுமானாலும் உணவு உண்ணலாம் என்ற முறையற்ற உணவுப் பழக்கம் அதிகரித்து விட்டது. பெரும்பாலும் ஆன்லைனில் விநியோக செய்யும் உணவுகள் நெகிழி பைகளில்  வருவதால் உடல் நலப் பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது.

கண்ணைக் கவரும் விளம்பரங்கள், தள்ளுபடிகள், சலுகைகள், திரும்ப பெரும் கொள்கைகள், பல்வேறு வகையான உணவுகள் மற்றும் அவைகளின் விலை ஒப்பீடுகள், வீட்டு வாசலில் உணவு விநியோகம் போன்ற வசதிகள் ஆன்லைனில் உணவு வாங்க நுகர்வோர்களைத் தூண்டுகிறது. நாம் என்ன வாங்க வேண்டும்? என்பதை கூட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தீர்மானிக்கிறது.எல்லா சூழ்நிலைகளுக்கும் தொழில்நுட்பத்தையே சார்ந்து இருக்கும் நிலை அதிகரித்து சமூகத்துடனான தொடர்பும் குறைந்து வருகிறது.

மேற்கத்திய உணவு பழக்கங்கள் அதிகரிப்பது மட்டுமல்லாமல் இந்திய பாரம்பரிய உணவு தானியங்களும் அழிந்து வருகிறது. குளிருக்கும் மலைக்கும் வெயிலுக்கும் ஏற்றார் போல் உணவு சாப்பிட நினைப்பவர்கள் அதை விநியோக செய்யும் நபரின் நிலைமையை நினைத்துப் பார்ப்பதில்லை. பெரும்பாலானோர் அவர்களை சக மனிதர்களாக மதிப்பதே கிடையாது. ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களையும் மற்றும் நுகர்வோரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.

“பூங்கா இதழ்” படிக்க  இங்கே தொடுங்கள்! (Click here)

பல நோய்களுக்கு வித்திடும் ஆன்லைன் உணவு பழக்கம் – டி.எஸ்.கீர்த்தனா, சட்டக் கல்லூரி மாணவி

ஆரோக்கியமாக வாழ்ந்த மக்கள் இன்று நோய்களை வாழ்வில் ஒரு அங்கமாக ஏற்றுக் கொண்டு விட்டனர். ஆன்லைன் உணவுகளை உட்கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றது. முன்பெல்லாம், வீட்டில் சமைக்க முடியாமல் போனாலோ அல்லது திடீர் விருந்தினர்கள் வந்துவிட்டாலோ உணவகங்களில் இருந்து சாப்பாடு வாங்குவது வழக்கமாக இருந்தது. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது, கைபேசி செயலி மூலம்  ஆன்லைனில் ஆர்டர் செய்தால் ருசியான உணவு வீட்டிற்கே வந்து விடுகிறது. வெளியே போய் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. ஆன்லைன் உணவுகளால் உடல் பருமன் பலருக்கு அதிகரித்துவிட்டது. கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பது, சோம்பலான வாழ்க்கை முறை ஆகியவை இன்று அதிகரித்து விட்டது. உடல் பருமன் காரணமாக சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, மூச்சு திணறல், மூட்டு வலி, முதுகு வலி போன்ற பல உபாதைகள் ஏற்படுகின்றன.

சோம்பேறித்தனத்தை வளர்த்து ஆரோக்கியத்தை குறைக்கும் ஆன்லைன் உணவு பழக்கம் – பா.பிரதி பாலா, சட்டக் கல்லூரி மாணவி

உணவகத்தின் விலை பட்டியலில் இருப்பது போல் இல்லாமல் ஆன்லைன் உணவு விநியோக சேவையில் உணவில் விலை அதிகமாகவும், சில நேரங்களில் உணவின் அளவு குறைவாகவும் உள்ளது. உணவு சரியான பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தரத்துடன் தயாரிக்கப்படவில்லையெனில், மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு உடல் நல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.இதன் மூலம் மக்களுக்கு இதர மருத்துவ செலவுகள் உண்டாகிறது. ஆன்லைன் உணவு விநியோகம் மூலம் மக்களுக்கு சோம்பேறித்தனம் அதிகமாகி ஆரோக்கியத்தை பாதிக்கிறது. மக்கள் வீட்டிலேயே உணவு தயாரித்து உணவருந்துவதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.

நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: ஆன்லைன் உணவு விற்பனைக்கு முறையான நெறிமுறைகள் வகுக்கப்பட்டு தீவிரமாக அமலாக்கும் செய்யப்படுவது மக்களின் நலனை காக்க உதவும்.

பூங்கா இதழில் “ஒரு உயிர் வாழ்ந்தது போதும் என்று நிர்ணயிக்கும் உரிமை யாருக்கு உண்டு? கருணை கொலை சரிதானா?” – பல்கீஸ் பீவி. மு, சட்டக் கல்லூரி மாணவி. “பூங்கா இதழ்” படிக்க  இங்கே தொடுங்கள்! (Click here).

பூங்கா இதழ், நுகர்வோர் பூங்கா இணைய இதழ்களின் படைப்புகளை நேரடியாக தங்கள் அலைபேசியில் பெற வாட்ஸ் அப் குழுவில் இணையுங்கள்! இணைய இங்கே தொடவும் (Click Here!)
கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்!  பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!  
 
வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, துவரம் பருப்பு போன்றவற்றின் விலை திடீரென பல மடங்கு உயர்வது ஏன் தெரியுமா? இன்னும் மூன்று மாதத்தில் துவரம் பருப்பின் விலை மூன்று மடங்காகி விடுமா?
 
ஜாமீன் கையொப்பம் செய்தவரிடம் அசல் ஆவணங்களை வழங்கிய வங்கி வாடிக்கையாளருக்கு ரூபாய் 30 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு  

வாக்காளரியல் என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்!

எங்களது வெளியீடுகள் (Our Current and Upcoming publication). இதழ்களின் பெயரை தொட்டால் இதழ்களின் இணையதளத்துக்கு செல்லலாம் (Click the heading of journals, see the concern website)

வெகுஜன வெளியீடுகள் (Popular Park)

நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ்
நுகர்வோர் பூங்கா (ஆங்கிலம்) – இணைய இதழ்
பூங்கா இதழ் (தமிழ்) – இணைய இதழ்
தி நியூஸ் பார்க் (ஆங்கிலம்) – இணைய இதழ்
தி நியூஸ் பார்க் மொபைல் பயன்பாடு (Mobile App) – soon

ஆராய்ச்சி வெளியீடுகள் (Research Park)

சட்டம், மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி இதழ் 
சர்வதேச நிறுவனங்கள், அரசியலமைப்பு சட்டம், ஆட்சியியல் ஆராய்ச்சி இதழ் 
குற்றங்கள், விபத்துகள், குற்றவியல் சட்டம், பாதிக்கப்பட்டோரியல் ஆராய்ச்சி இதழ்
அமைதி உத்திகள் மற்றும் ஆராய்ச்சி இதழ் 
விண்வெளி, கடல், ஆகாயம் ஆராய்ச்சி இதழ்
வாக்காளரியல் (Voterology) ஆராய்ச்சி இதழ்

நுகர்வோர் பூங்கா படைப்புகளின் வகைகள் (Menu and Categories) – மெனுவுக்கு சென்று தலைப்புகளை தொட்டால் அந்தப் பகுதிகளுக்கு செல்லலாம்
நாட்டு நடப்புபிரச்சனை
தமிழகம்சேவை குறைபாடு
தேசம்நியாயமற்ற வர்த்தகம்
சர்வதேசம்குறைபாடான பொருட்கள்
சிறப்பு படைப்புகள்கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தகம்
கருத்துரைநியாயமற்ற ஒப்பந்தம்
நேர்காணல்அதிக விலை
அறிவு பூங்காஇருண்ட மாதிரி
 தவறான விளம்பரம்
பொது
சட்டம்தீர்ப்புகள்
நுகர்வோர் பாதுகாப்புவீட்டு உபயோகம்
உணவு பாதுகாப்புஉணவு
அத்தியாவசிய பொருட்கள்வீட்டு வசதி
தரநிலைகள்மருத்துவம்- மருந்துகள்
மருத்துவ-மருந்து கட்டுப்பாடுவங்கி/நிதி
வங்கி-நிதிகாப்பீடு
காப்பீடுபோக்குவரத்து
சட்ட அளவியல்அரசு
பொதுபொது
ஆய்வுகள்நாங்கள்
சந்தை ஆய்வுஎங்களைப் பற்றி
புலனாய்வுபுரவலர்கள்
திறனாய்வுஆதரிங்கள்
சவால்கள்பங்களியுங்கள்
ஒப்பீடு“பூங்கா இதழ்” படியுங்கள்! இணைப்புக்குச் செல்ல இங்கே தொடுங்கள்! (Click here)
ஆராய்ச்சி பூங்கா
கதம்பம்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்