spot_img
September 8, 2024, 5:10 am
spot_img

10 லட்சம் வாசகர்கள் தொட்ட நுகர்வோர் பூங்கா இணைய இதழில் முழு நேர பகுதி/நேர வேலை வாய்ப்பு & புரவலர்களாக- விளம்பரதாரர்களாக  இணைய அழைப்பு

நுகர்வோர் பூங்காவிற்கான இணையதள பதிவானது (registration) கடந்த 2023 ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இணைய இதழ் தொடக்கமானது 2024 ஜனவரி முதல் நாளில் நடைபெற்றது. கடந்த ஆறு மாதங்கள் 15 நாட்களில் நுகர்வோர் பூங்கா இணைய இதழ் 10 லட்சம் முறை வாசகர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது என கூகுள் நிறுவனத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற மின்னஞ்சல் மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. இத்தகைய பெருமைக்கு சொந்தக்காரர்களான பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்கா இணைய இதழ்களின் வாசகர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

அறிமுகம்

அமைதிக்கான உத்திகள் அமைப்பின் சார்பில் நுகர்வோர் பூங்கா https://theconsumerpark.com/ மற்றும் பூங்கா இதழ்  https://thenewspark.in/ ஆகிய இணைய இதழ்கள் தமிழில் வெளியாகி வருகின்றன. வரும் 2024 அக்டோபர் முதல் தேதியில் இருந்து ஆராய்ச்சி பூங்கா https://researchpark.in/  என்ற இணைய இதழ் வெளியிடப்பட உள்ளது. நுகர்வோர் பூங்கா, பூங்கா இதழ் ஆகியவற்றின் ஆங்கில மொழி இணைய இதழ்களும் சர்வதேச அமைதிக்கான உத்திகள் கல்வி நிறுவனமும் விரைவில் அமைதிக்கான உத்திகள் அமைப்பின் சார்பில் தொடங்கப்பட உள்ளது.

எங்கள் குழு (Our Team)

அமைதிக்கான உத்திகள் அமைப்பின் நிர்வாக இயக்குனர் மற்றும் இயக்குனர் குழுவால் வழிநடத்தப்படும் நுகர்வோர் பூங்கா, பூங்கா இதழ் மற்றும் ஆராய்ச்சி பூங்கா இதழ்களுக்கு நிர்வாக அலுவலரும் ஆசிரியர்களும் கட்டுரையாளர்களும் கௌரவ கட்டுரை பங்காளிப்பாளர்களும் பயிற்சி கட்டுரையாளர்களாக சட்டக் கல்லூரி மாணவர்களும் தன்னார்வலர்களும் உள்ளனர். 

தூதுவர்/புரவலர் (Good Will Ambassadors/Patrons) 

மக்களுக்கு செய்தி மற்றும் விழிப்புணர்வு கட்டுரைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு   செல்வதை வலுப்படுத்தும் வகையில் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்கா இதழ்களுக்கு நல்லெண்ண தூதர்களை நியமிக்கவும்   புரவலர்களை நியமிக்கவும் அமைதிக்கான உத்திகள் அமைப்பு திட்டமிட்டுள்ளது.  இவ்வாறு நியமிக்கப்படும் நல்லெண்ண தூதர்கள் மற்றும் புரவலர்கள் புகைப்படம் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்கா இதழ் ஆகியவற்றில் இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்படும் காலத்திற்கு வெளியிடப்படும். இந்தப் பணியில் அர்ப்பணிக்க விரும்புவோர் [email protected] அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் எங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 9487665454 என்ற அலைபேசி எண்ணில் வாட்ஸ் அப் மூலம் தகவல்களை பதிவு செய்தால் (text only – no voice call) தங்களை அமைதிக்கான உத்திகள் அமைப்பு தொடர்பு கொள்ளும்

விளம்பர கட்டணங்கள் (Tariff) 

பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்கா ஆகிய இணையதள இதழ்களில் ஒவ்வொரு கட்டுரையிலும் மத்தியில் விளம்பரம் செய்ய கட்டணம் ரூ 1300/- மட்டுமே. விளம்பரம் இணையதளத்தின் ஆயுட்காலம் முழுவதும் கட்டுரையில் இடம் பெற்றிருக்கும். ஒரு மாதத்திற்கு அல்லது ஒரு ஆண்டுக்கு ஒவ்வொரு கட்டுரையிலும் விளம்பரம் வெளியிட முன்பதிவு செய்தால் கட்டணச் சலுகை உண்டு. 

இணையதளத்தில் Width 300 x Height 250 என்ற அளவில் இரண்டு ஆண்டுகளுக்கான விளம்பர கட்டணம் ரூ 50,000/ மட்டுமே.  இணையதளத்தின் முகப்பு பக்கத்திலும் ஒவ்வொரு பக்கத்திலும் Width 300 x Height 250 என்ற அளவில் இரண்டு ஆண்டுகளுக்கான விளம்பர கட்டணம் ரூ 1,00,000/ மட்டுமே.  இதனைத் தவிர ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குபவர்களும் வணிக நிறுவனத்தினரும் தங்களது கருத்துக்களை கட்டுரையின் இடையில் விளம்பரமாக பதிவு செய்யலாம்.

வேலைவாய்ப்பு

பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்கா ஆகிய இணையதள இதழ்களுக்கு மார்க்கெட்டிங் அலுவலர்களும் (Marketing Officers) விளம்பர ஏஜெண்டுகளும் (Advertisement Agents) தேவைப்படுகிறது. மார்க்கெட்டிங் அலுவலர்களுக்கு சிறந்த ஊக்கத்தொகையும் (incentive) விளம்பர ஏஜெண்டுகளுக்கு போதிய கமிஷனும் (commission) வழங்கப்படும்.  முழு நேரமாகவும் பகுதி நேரமாகவும் இந்த பணியை செய்யலாம். கல்லூரி மாணவர்கள் (college student) படிக்கும் காலத்தில் பகுதி நேரமாக பணியாற்றி வருமானம் பெறலாம். இளைஞர்களும் பணி ஓய்வு பெற்றவர்களும் முழு நேரமாக அல்லது பகுதி நேரமாக பணியாற்றலாம்.

விருப்பமுள்ளவர்கள் [email protected] அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் விண்ணப்பிக்கலாம். 9487665454 என்ற அலைபேசி எண்ணில் வாட்ஸ் அப் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம் (text only – no voice call).  தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் அமைதிக்கான உத்திகள் அமைப்பு தொடர்பு கொள்ளும். இந்த வாய்ப்பு குறுகிய காலம் மட்டுமே வழங்கப்படுவதால் விருப்பமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.அமைதிக்கான உத்திகள் அமைப்பு பற்றிய விவரங்களை கீழ்காணும் இணையதள பக்கங்களில் அறிந்து கொள்ளலாம்

ஜிவிடி
ஜிவிடி
நிர்வாக அலுவலர், அமைதிக்கான உத்திகள் நிறுவனம்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்