spot_img
November 21, 2024, 6:27 pm
spot_img

மனித உரிமைகள் குறித்த தேர்தல் அறிக்கை – அரசியல் கட்சிகளுக்கு சில கேள்விகள்! படியுங்கள்!  பிடித்தால் அனைவருக்கும் அனுப்புங்கள்! 

கடந்த 1948 டிசம்பர் 10 ஆம் நாளில் உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்படுத்தப்பட்டது. பின்னர் 1966 ஆம் ஆண்டு அரசியல், பொருளாதாரம், சமூகம், சிவில் மற்றும் கலாச்சார உரிமைகளை பாதுகாக்க சர்வதேச அளவில் இரண்டு மனித உரிமை   ஆவணங்கள் ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்படுத்தப்பட்டது.   இவற்றில் கையொப்பமிட்ட நாடுகள் தங்களது நாடுகளில் மனித உரிமைகளுக்கான தனி சட்டத்தை இயற்றி சிறப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை பலமுறை கோரிக்கை விடுத்தது. கடந்த 1993 ஆம் ஆண்டில் பாரீசில் நடைபெற்ற மாநாட்டில் ஐக்கிய   நாடுகள் சபையின்   உறுப்பினர்களாக உள்ள பல நாடுகள் மனித உரிமைகளுக்கு தனி சட்டத்தை இயற்றி சிறப்பு அமைப்புகளை ஏற்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டு ஓராண்டுக்குள் இதற்கான சட்டத்தை இயற்றாத நாடுகள் உடனடியாக சட்டம் இயற்றி அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் 1993 ஆம் ஆண்டு மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.

மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டப்படி தேசிய மனித உரிமைகள் ஆணையமும் மாநிலங்களில் மாநில மனித உரிமை ஆணையங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த சட்டம் மாவட்ட அளவில் மாவட்ட மனித உரிமைகள் நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட நீதிபதி நிலையில் உள்ள ஒரு நீதிமன்றம் மாவட்ட மனித உரிமை நீதிமன்றம் என்று அரசால் (designated) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கீழ்கண்ட கேள்விகள் குறித்து மக்களவைத் தேர்தல் களத்தில் உள்ள அரசியல் கட்சிகள் பதிலளிக்க வேண்டியது அவசியம் ஆகும். இதுவே மனித உரிமைகள் குறித்த தேர்தல் அறிக்கையாகும்.

1. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவின் தலைவராக பிரதம அமைச்சரும் உறுப்பினர்களாக எதிர் கட்சித் தலைவர் மற்றும் அரசின் பிரதிநிதிகளும் உள்ளார்கள். இத்தகைய நிலை காரணமாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட அரசியல் ஆதரவு தேவைப்படுகிறது.  இதனை மாற்றி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவின் தலைவராக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும் உறுப்பினர்களாக மூத்த இரண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் கொண்ட தேர்வு குழுவை அமைக்கும் வகையில் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தை திருத்தம் செய்ய அரசியல் கட்சிகள் நடைபெறும்   தேர்தல் களத்தில் வாக்குறுதி அளிப்பார்களா? அல்லது   தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவிற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைவராக இருப்பதைப் போல தேர்வு குழுவாவது குறைந்தபட்சம் அமைக்க அரசியல்   கட்சியினர் ஆதரவளிப்பார்களா?

2. மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவின் தலைவராக மாநில முதலமைச்சரும் உறுப்பினர்களாக எதிர் கட்சித் தலைவர் மற்றும் அரசின் பிரதிநிதிகளும் உள்ளார்கள். இத்தகைய நிலை காரணமாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட அரசியல் ஆதரவு தேவைப்படுகிறது.  இதனை மாற்றி மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவின் தலைவராக சம்பந்தப்பட்ட மாநிலத்தின் உயர்   நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும் உறுப்பினர்களாக மூத்த இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகளையும் கொண்ட தேர்வு குழுவை அமைக்கும் வகையில் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தை திருத்தம் செய்ய அரசியல் கட்சிகள் நடைபெறும்   தேர்தல் களத்தில் வாக்குறுதி அளிப்பார்களா? அல்லது   மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவிற்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைவராக இருப்பதைப் போல தேர்வு குழுவாவது குறைந்தபட்சம் அமைக்க அரசியல்   கட்சியினர் ஆதரவளிப்பார்களா?

3. மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள் என்று தனியாக எதுவும் இல்லாமல் ஏற்கனவே இயங்கும் மாவட்ட அளவிலான நீதிமன்றங்களுடன் மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள் செயல்படுவதால் மனித உரிமைகளுக்கான தனித்தன்மை இல்லை என்ற நிலையில் மாவட்ட மனித உரிமை   நீதிமன்றங்களின் பணிகளை மாவட்ட அளவில் உள்ள நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு வழங்க அல்லது தனியான நீதிமன்றங்களை ஏற்படுத்த வகை செய்யும்   சட்ட திருத்தத்தை மேற்கொள்ள களத்தில் உள்ள அரசியல் கட்சிகள் உறுதி அளிப்பார்களா?

4. ஒவ்வொரு மாவட்டத்திலும் மனித உரிமை மீறல்களை விசாரிக்க  தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்களில் உள்ளதை போல மாவட்ட சிறப்பு புலனாய்வு குழு (special investigation team) ஏற்படுத்த அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிப்பார்களா?

5. பெண்கள் நலன், குழந்தைகள் நலன் போன்றவற்றிற்கு தனியாக அரசின் துறைகள் இருப்பதைப் போல மனித உரிமைகள் பாதுகாப்புக்கு   மத்திய, மாநில அரசுகளின் தனித்துறை (department human rights protection) ஏற்படுத்த அரசியல் கட்சிகள் முன் வருவார்களா?

6. பல்வேறு மாநிலங்களில் மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களுக்கான விதிகள் தெளிவற்ற நிலையில் உள்ளதால் மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களை நெறிப்படுத்த தேசம் முழுவதும் ஒரே மாதிரியான மாவட்ட மனித உரிமை நீதிமன்ற விதிகள் இயற்றப்படுமா?

7. ஊழல் குறித்த தேசிய அளவிலான உயர் விசாரணை அமைப்பான லோக்பாலின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவின் தலைவராக பிரதம அமைச்சர் உள்ளார்.   இதனை மாற்றி லோக்பாலின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவின் தலைவராக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும் உறுப்பினர்களாக மூத்த இரண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் கொண்ட தேர்வு குழுவை அமைக்கும் வகையில் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தை திருத்தம் செய்ய அரசியல் கட்சிகள் நடைபெறும்   தேர்தல் களத்தில் வாக்குறுதி அளிப்பார்களா? அல்லது   குறைந்தபட்சம் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவிற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைவராக இருப்பதைப் போல தேர்வு குழுவாவது அமைக்க அரசியல்   கட்சியினர் ஆதரவளிப்பார்களா?

8. ஊழல் குறித்த மாநில அளவிலான உயர் விசாரணை அமைப்பான லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவின் தலைவராக மாநில முதலமைச்சர் உள்ளார்.  இதனை மாற்றி லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவின் தலைவராக சம்பந்தப்பட்ட மாநிலத்தின் உயர்   நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும் உறுப்பினர்களாக மூத்த இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகளையும் கொண்ட தேர்வு குழுவை அமைக்கும் வகையில் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தை திருத்தம் செய்ய அரசியல் கட்சிகள் நடைபெறும்   தேர்தல் களத்தில் வாக்குறுதி அளிப்பார்களா? அல்லது   குறைந்தபட்சம் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவிற்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைவராக இருப்பதைப் போல தேர்வு குழுவாவது   அமைக்க அரசியல்   கட்சியினர் ஆதரவளிப்பார்களா?

9. ஆட்சியில் வெளிப்படை தன்மையை அதிகரித்து நல்லாட்சி வழங்க உதவும் அமைப்பான மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையர் மற்றும் ஆணையர்களை தேர்வு செய்யும் குழுவின் தலைவராக பிரதம அமைச்சர் உள்ளார்.   இதனை மாற்றி மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையர் மற்றும் ஆணையர்களை தேர்வு செய்யும் குழுவின் தலைவராக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும் உறுப்பினர்களாக மூத்த இரண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் கொண்ட தேர்வு குழுவை அமைக்கும் வகையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை திருத்தம் செய்ய அரசியல் கட்சிகள் நடைபெறும்   தேர்தல் களத்தில் வாக்குறுதி அளிப்பார்களா? அல்லது   குறைந்தபட்சம் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவிற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைவராக இருப்பதைப் போல தேர்வு குழுவாவது அமைக்க அரசியல்   கட்சியினர் ஆதரவளிப்பார்களா?

10. மாநில   தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையர் மற்றும் ஆணையர்களை தேர்வு செய்யும் குழுவின் தலைவராக மாநில முதலமைச்சர் உள்ளார்.   இதனை மாற்றி  மாநில தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையர் மற்றும் ஆணையர்களை தேர்வு செய்யும் குழுவின் தலைவராக மாநிலத்தின் உயர்   நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும் உறுப்பினர்களாக மூத்த இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகளையும் கொண்ட தேர்வு குழுவை அமைக்கும் வகையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை திருத்தம் செய்ய அரசியல் கட்சிகள் நடைபெறும்  தேர்தல் களத்தில் வாக்குறுதி அளிப்பார்களா? அல்லது   குறைந்தபட்சம் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவிற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைவராக இருப்பதைப் போல தேர்வு குழுவாவது அமைக்க அரசியல்   கட்சியினர் ஆதரவளிப்பார்களா?

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்