spot_img
September 14, 2024, 5:14 pm
spot_img

பன்னிரண்டாம் வகுப்புக்கு பின்னர் திரைப்படக் கல்லூரியில் சேர ஆசையா?

சென்னையில் கடந்த 1945 ஆம் ஆண்டில் அடையாறு திரைப்படக் கல்லூரி தொடங்கப்பட்டது.  இதன் பெயர் கடந்த 1959 ஆம் ஆண்டு இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிலிம் டெக்னாலஜி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.  கடந்த 2006 ஆம் ஆண்டு எம். ஜி. ஆர். அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் கீழ் சென்னை அடையாறு பகுதியில் தரமணியில் இயங்கும் இந்த திரைப்பட பயிற்சி   நிறுவனத்தால் வழங்கப்படும் கற்பிக்கப்படும் படிப்புகளுக்கு தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தால் பட்டம் வழங்கப்படுகிறது. இங்கு கற்பிக்கப்படும் படிப்புகள் விவரம் பின்வருமாறு.

  • இளங்கலை காட்சிக்கலை ( ஒளிப்பதிவு) Bachelor of Visual Arts (Cinematography)
  • இளங்கலை காட்சிக்கலை (எண்மிய இடைநிலை) Bachelor of Visual Arts (Digital Intermediate)
  • இளங்கலை- காட்சிக்கலை (ஒலிப்பதிவு) Bachelor of Visual Arts (Autography)
  • இளங்கலை காட்சிக்கலை (இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல்) Bachelor of Visual Arts (Direction and Screenplay writing)
  • இளங்கலை காட்சிக்கலை (படத்தொகுப்பு) Bachelor of Visual Arts (Film Editing)
  • இளங்கலை காட்சிக்கலை (உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன்) Bachelor of Visual Arts (Animation and Visual Effects)

2024-25 ஆம் ஆண்டுக்கான சேர்க்கை விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை www.tn.gov.in என்ற இணையதம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய இறுதி நாள் 20-05-2024. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 27-05-2024 ஆம் தேதி மாலை 5 மணிக்குள்   முதல்வர், தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனம், சிஐடி கேம்பஸ், தரமணி, சென்னை -600 113 என்ற முகவரியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

புனே திரைப்படக் கல்லூரி (Film and Television Institute of India (FTII) இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் 1974 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 1960 ஆம் ஆண்டு புது   தில்லியில் தொடங்கப்பட்டு பின்னர் புனேவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின்  ஒரு மையம் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் செயல்படுகிறது.

அடூர் கோபாலகிருஷ்ணன், பாலு மகேந்திரா, சபனா ஆசுமி, சந்தோஷ் சிவன், நித்யா மேனன் உள்ளிட்ட பல பிரபலமான திரைப்பட இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், நடிகர் – நடிகைகளை புனே திரைப்படக் கல்லூரி உருவாக்கியுள்ளது. இக்கல்லூரியில் திரைப்பட இயக்கம், படத்தொகுப்பு ஒளிப்பதிவு,   நடிப்பு உள்ளிட்ட பல துறைகளில்   கல்வி வழங்கப்படுகிறது. இங்கு சேருவதற்கு தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வை (JET) எழுத வேண்டும்.  முழுமையான விவரங்களுக்கு https://www.ftii.ac.in/ என்ற இணையதளத்தை பார்வையிடவும்.

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்