spot_img
April 1, 2025, 3:41 pm
spot_img

லோக் ஆயுக்தா, நுகர்வோர் நீதிமன்றங்கள், குழந்தைகள் ஆணையம் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும் – லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தல்.

நாமக்கல்லில் மாவட்ட நுகர்வோர் நீதிபதியாக இருந்து அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அலுவலர்களின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் லோக் ஆயுக்தாவின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டு பொறுப்பேற்றுள்ள டாக்டர் வீ. ராமராஜ் அவர்களுக்கு பாராட்டு விழா நாமக்கல்லில் நடைபெற்றது. நாமக்கல் சிவில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் டி மோகன்ராஜ் மற்றும் நாமக்கல் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவரும் பார் கவுன்சில் உறுப்பினருமான ஆர். அய்யாவு ஆகியோர் பாராட்டு விழாவிற்கு கூட்டாக தலைமை வகித்தனர். (படத்துக்கு கீழே செய்தி தொடர்கிறது)

Dr V. Ramaraj is taking charge as Member, Tamil Nadu Lokayuktha at Chennai on 04th March 2025
Dr V.Ramaraj, Member, Tamil Nadu Lokayuktha, Felicitation event at Namakkal

கடந்த இரண்டு ஆண்டுகளில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியாக சுமார் 700-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பு வழங்கியவர் வீ. ராமராஜ். இந்தியாவிலேயே மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற அளவில் அதிக சமரச தீர்வுகளை வழங்கியவர். நீதிமன்ற உட் கட்டமைப்பை மேம்படுத்தியது நீதிமன்ற நிர்வாகத்தை வலுப்படுத்தியது மற்றும் விரைவான நீதியை வழங்கியது ஆகியன அவரது செயல்பாடுகளின் முக்கிய அம்சங்கள் என்று என்று நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற உறுப்பினர் ஆர். ரமோலா தெரிவித்தார்.(படத்துக்கு கீழே செய்தி தொடர்கிறது)

From left: Dr V Ramaraj, Member, Tamil Nadu Lokayuktha, Prof Dr Sivakumar, Bar Secretary P.Rajavelu, Dr V Ramaraj, R. Ayyavo, Member/Hon.Secretaty, Bar council of Tamil Nadu and Pondicherry

நாமக்கல் சிவில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளர்  ராஜவேலு, நாமக்கல் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத் செயலாளர்  கணேசன், மூத்த வழக்கறிஞர்கள் குமரேசன், காளியண்ணன், ஐயப்பன், இளங்கோவன்,  திருச்செங்கோடு பரணிதரன் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினார்கள். இவர் நாமக்கல்லில் பதவி ஏற்கும் போது பத்தாண்டுகளுக்கு மேலான வழக்குகள் நிலுவையில் இருந்தன. தற்போது ஓராண்டுக்கு மேலான வழக்குகள் கூட நிலுவையில் இல்லாத அளவுக்கு வழக்குகளை தீர்த்து வைத்தவர் வீ. ராமராஜ் என்று நிகழ்ச்சியில் பேசிய வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

முழுமையான சுற்றுச்சுவர் இல்லாத நிலையில் அதற்கான பணிகளை மேற்கொண்டு நுகர்வோர் நீதிமன்றத்துக்கு சுற்றுச்சுவர் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். பொதுமக்கள் நுகர்வோர் நீதிமன்றத்தை எளிதில் அணுகும் வகையில் வழிகாட்டும் பலகைகளை திருச்செங்கோடு சாலையில் இருந்து நுகர்வோர் நீதிமன்றம் வரை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். மாவட்ட நீதிமன்ற வளாகத்துக்கும் நுகர்வோர் நீதிமன்ற வளாகத்துக்கும் நேரடி பாதை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். நீதிமன்ற வளாகத்துக்குள் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியுள்ளதோடு நுகர்வோர் வழக்குகளை எவ்வாறு தாக்கல் செய்ய வேண்டும்? என்பது உட்பட பல்வேறு தகவல்களை நீதிமன்ற வளாகத்தில் பலகைகளாக ஏற்படுத்தியவர் வீ. ராமராஜ் என்று நிகழ்ச்சியில் பேசிய வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.(படத்துக்கு கீழே செய்தி தொடர்கிறது)

Dr V.Ramaraj, Member, Tamil Nadu Lokayuktha along with Namakkal bar association office bearers and others

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் சட்டக் கல்லூரி முதல்வர் டாக்டர் அருண் தலைமையில் சட்டக் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். தங்களுக்கு ஒழுக்கம், நேர மேலாண்மை, பேச்சாற்றல், எழுத்தாற்றல் உள்ளிட்டவற்றை வளர்ப்பதற்கு காரணமாக இருந்தவர் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி வீ. ராமராஜ்.  அவர் உயர் நீதிமன்ற நீதிபதிக்கு இணையான சம்பள விகிதத்தில் உள்ள பதவிக்கு சென்றாலும் எங்களுக்கு பெரிய இழப்பாகவே நாங்கள் கருதுகிறோம் என்று நிகழ்ச்சியில் பேசிய சட்டக் கல்லூரி மாணவ, மாணவர்கள் தெரிவித்தனர்.(படத்துக்கு கீழே செய்தி தொடர்கிறது)

உலக தத்துவஞானிகள் என்ற புத்தகத்தை சட்டக் கல்லூரி மாணவ மாணவியர் சார்பாக பரிசாக வழங்கிய மாணவிகளின் ஒருவர் பேசும்போது “எங்கள் ராமராஜ் ஐயாவும் தத்துவ ஞானிகள் தான் என்பதால்தான் இந்த புத்தகத்தை தேர்வு செய்தோம் என்றும் விரைவில் இந்த புத்தகத்தில் அவர் இடம் பெறுவார் என்றும்” தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்ட சிறு மற்றும் குறு  தொழில் நிறுவனங்களின் (MSME) செயலாளர் கோஸ்டல் இளங்கோ, கணக்கன்பட்டி ராஜ பைரவி, பொன். ராஜதுரை உள்ளிட்டோர் பொதுமக்கள் தரப்பில் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இறுதியில் தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் ஏற்பு உரை வழங்கினார். குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட ஒவ்வொரு தரப்பினரையும் பாதுகாக்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட்டு பாதுகாப்பு அமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன, இதைப்போலவே, மனித உரிமைகள் ஊழல் ஒழிப்பு உட்பட ஒவ்வொரு பொருள் தொடர்பாகவும் சட்டங்கள் இயற்றப்பட்டு அதற்கான அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. மக்களின் உரிமைகளையும் அதனை காக்கும் அமைப்புகளை பற்றியும் பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும் என்று வீ.  ராமராஜ் தெரிவித்தார்.

குழந்தைகளின் உரிமைகள் எவை? என்பதை தெரிந்து கொண்டு அவற்றைக் காக்கும் குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தை பற்றிய விவரங்களையும் முழுமையாக அறிந்து கொண்டால்தான் குழந்தை உரிமை மீறல்களை தவிர்க்க இயலும். நுகர்வோரின் உரிமைகள் எவை? என்பதையும் நுகர்வோரின் பிரச்சனைகள் எவை? என்பதையும் அறிந்து கொண்டு அதனை தீர்க்க நுகர்வோர் நீதிமன்றத்தை எவ்வாறு அணுகுவது? எவ்வாறு வழக்கு நடத்துவது? என்று விவரங்களை தெரிந்து கொண்டால்தான் நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்க முடியும் என்று வீ.  ராமராஜ் தெரிவித்தார்.

நல்லாட்சிக்கும் மக்களின் நல் வாழ்விற்கு ஊழல் மிகப்பெரிய எதிரியாகும். ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கும் அமைப்புகளான லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரிக்க வேண்டும். இத்தகைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை அரசும் வழக்கறிஞர்கள் சங்கங்களும் தன்னார்வ அமைப்புகளும் மேற்கொள்ள வேண்டும் என்று வீ. ராமராஜ் வலியுறுத்தினார்

இந்நிகழ்ச்சியில் ஏராளமான வழக்கறிஞர்களும் சட்டக் கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் நீதிமன்ற ஊழியர்கள் சார்பில் டாக்டர் வீ. ராமராஜ் அவர்களுக்கு பிரிவு உபசார விழா நடத்தினர்.(படத்துக்கு கீழே செய்தி தொடர்கிறது)

Dr. V.Ramaraj, Member, Tamil Nadu Lokayktha, Farewell event at Namakkal Consumer Court

நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: 30 ஆண்டுகால வழக்கறிஞர் தொழில் அனுபவத்தையும் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராகவும் மாவட்ட நுகர்வோர் நீதிபதியாகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் டாக்டர் வீ. ராமராஜ். டாக்டர் பட்டம் உள்ளிட்ட 15 பட்டங்களையும் இன்னும் ஆய்வு நெறியாளர் என்பது உட்பட்ட பல தகுதிகளையும் பெற்றவராவார். உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுபவர்கள் தங்களுக்கு சட்டம் வழங்கியுள்ள கடமைகளை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பணியாற்றுவது அவசியமானதாகும். இத்தகைய பண்பை கொண்ட டாக்டர் வீ. ராமராஜ் உறுப்பினர், தமிழ்நாடு லோக் ஆயுக்தா அவர்களுக்கு நாமக்கல் வழக்கறிஞர்கள் நடத்திய பாராட்டு விழா சாலச் சிறந்ததாகும்.

நன்றி: “தினகரன்”
நன்றி: “தினமணி”
நன்றி: “காலைக்கதிர்”
கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)  
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  
 
வாக்காளரியல் என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்