spot_img
July 27, 2024, 8:37 am
spot_img

நுகர்வோர் பாதுகாப்பு: ஒரு பொருள் அல்லது சேவையின் தயாரிப்பு பொறுப்பாளரை தெரிந்து கொள்ளுங்கள்!

ஒரு தயாரிப்பு உற்பத்தியாளர் (product manufacturer) அல்லது தயாரிப்பு சேவை வழங்குநர் (service provider) அல்லது தயாரிப்பு விற்பனையாளருக்கு (seller) எதிராக ஒரு புகார்தாரரால் (complainant) ஒரு தயாரிப்பு பொறுப்பு நடவடிக்கை எடுக்கப்படலாம். இங்கு தயாரிப்பு என குறிப்பிடப்படுவது பொருள் அல்லது பொருட்களை (goods) குறிக்கும். 

உற்பத்தியாளர்

விற்பனை செய்யப்பட்டுள்ள பொருளில் உற்பத்தி குறைபாடு இருந்தாலும் பொருளின் தயாரிப்பு வடிவமைப்பில் (design) குறைபாடு இருந்தாலும் பொருள் குறித்த விபர குறிப்புகளில் உள்ள அம்சங்கள் (specification)  இல்லாமல் இருந்தாலும் பொருளுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவாதத்திற்கு மாறாக பொருள் இருந்தாலும் பொருளை உபயோகப்படுத்தும் போது தீங்கு ஏற்படாமல் இருக்க தேவையான அறிவுறுத்தல்களை வழங்காமல் விட்டாலும் பொருளை சரியாக உபயோகப்படுத்தாவிட்டால் எத்தகைய தீங்கு ஏற்படும் என்ற விவரங்களை தெரிவிக்காவிட்டாலும் தயாரிப்பு உற்பத்தியாளர் தயாரிப்பு   பொறுப்பு நடவடிக்கைக்கு   உட்பட்டவராவார்.

ஒரு தயாரிப்பு உற்பத்தியாளர் ஒரு பொருளின்  உத்தரவாதத்தை உருவாக்குவதில் அலட்சியம் அல்லது மோசடி செய்யவில்லை என்பதை நிரூபித்தாலும், தயாரிப்பு பொறுப்பு நடவடிக்கையில் அவர் பொறுப்பேற்க வேண்டும்..

சேவை வழங்குபவர்

ஒரு சேவை வழங்குநரால் (service provider) வழங்கப்பட்ட சேவையானது நடைமுறையில் உள்ள சட்டத்தின் கீழ் அல்லது ஒப்பந்தப்படி அல்லது வேறு விதமாக வழங்கப்பட வேண்டிய தரம், இயல்பு அல்லது செயல்திறன் (faulty or imperfect or deficient or inadequate quality, nature or   performance) ஆகியவற்றில் குறைபாடு உள்ளது எனில் சேவை வழங்குபவர் தயாரிப்பு பொறுப்புடையவராவார். 

சேவை வழங்குபவர் செய்ய வேண்டிய செயலை செய்யாமல் விடுத்தல் (omission) அல்லது செய்யக்கூடாத செயலை செய்தல் (commission) அல்லது அலட்சியம் (negligent) அல்லது தீங்கு விளைவிக்க கூடும் என்ற தகவல்களை (instructions) வழங்காமல் இருத்தல் போன்றவை சேவை வழங்குனர்கள் மீது தயாரிப்பு பொறுப்பு நடவடிக்கையை எடுக்க காரணிகளாகும்.

சேவை வழங்குநர் எந்தத் தீங்கையும் தடுக்க போதுமான அறிவுரைகள் அல்லது எச்சரிக்கைகளை வழங்கவில்லை அல்லது வழங்கப்படும் சேவையானது வழங்கப்பட்டுள்ள உத்தரவாதத்திற்கு இணங்கவில்லை என்ற நிலையில் சேவை வழங்குநர் மீது தயாரிப்பு பொறுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.

விற்பனையாளர்

தீங்கு விளைவிக்கும் ஒரு தயாரிப்பின் வடிவமைப்பு, சோதனை, உற்பத்தி, பேக்கேஜிங் அல்லது லேபிளிங் ஆகியவற்றில் விற்பனையாளரின் பங்கு இருந்தது எனில் விற்பனையாளர் குறைபாடு ஏற்படும்போது தயாரிப்பு பொறுப்பு உள்ளவராவார்.  விற்பனையாளர் ஒரு தயாரிப்பின் அம்சத்தை மாற்றி (altered or modified) அமைத்துள்ள நிலையில் தீங்கு ஏற்படும் போது அவரே தயாரிப்பு பொறுப்புடையவராவார். 

தயாரிப்பின்   உற்பத்தியாளர் வழங்கிய  உத்தரவாதம் அல்லாமல் விற்பனையாளர் ஒரு உத்தரவாதத்தை  வழங்கி  வழங்கப்பட்ட உத்தரவாதத்திற்கு இணக்கம் இல்லாத சூழ்நிலையில் தீங்கு ஏற்படும் போது விற்பனையாளரே தயாரிப்பு பொறுப்புடையவராவார். 

ஒரு தயாரிப்பானது விற்பனையாளரால் விற்பனை செய்யப்பட்ட நிலையில், அதன் உற்பத்தியாளர் யார்? என்று தெரியாத நிலையிலும் உற்பத்தியாளர் யார்? என்று தெரிந்தாலும் உற்பத்தியாளர் மீது இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்ற சூழ்நிலையிலும் அந்த தயாரிப்பில் ஏற்படும் குறைபாடு காரணமான தீங்குகளுக்கு விற்பனையாளரே தயாரிப்பு பொறுப்புடையவராவார்.

ஒரு தயாரிப்பை கையாளும்போது உள்ள ஆபத்துக்கள் குறித்த எச்சரிக்கைகளை உற்பத்தியாளர் வழங்கியும் அதனை விற்பனையாளர் நுகர்வோருக்கு வழங்காததால் குறைபாடு ஏற்பட்டு நுகர்வோருக்கு தீங்கு ஏற்பட்டாலும் ஒரு தயாரிப்பை ஒன்று சேர்ப்பதிலும் (assembling) ஆய்வு செய்வதிலும் (inspection) பராமரிப்பதிலும் (maintaining) தேவையான கவனத்தை விற்பனையாளர் செய்யாததால் நுகர்வோருக்கு தீங்கு  ஏற்பட்டாலும் விற்பனையாளரே தயாரிப்பு பொறுப்புடையவராவார்.

விதிவிலக்குகள்

தீங்கு விளைவிக்கும் நேரத்தில் தயாரிப்பானது நுகர்வோரால் தவறாக பயன்படுத்தப்படும் (misused) போதும் மாறுதல்கள் செய்து பயன்படுத்தப்பட்டிருக்கும்போதும் (altered or modified) விற்பனையாளர் தயாரிப்பு பொறுப்பு நடவடிக்கைக்கு உள்ளாக மாட்டார். 

தயாரிப்பு உற்பத்தியாளரால் போதுமான எச்சரிக்கைகள் மற்றும்  அறிவுரைகள் தயாரிப்பை வாங்கிய நுகர்வோருக்கு வழங்கப்பட்ட நிலையில் வாங்கிய   நுகர்வோர் தயாரிப்பை பயன்படுத்த அனுமதித்த நுகர்வோரின் பணியாளர்களுக்கு போதுமான எச்சரிக்கைகள் மற்றும் அறிவுரைகளை வழங்காத நிலையில் தீங்கு ஏற்பட்டால் உற்பத்தியாளர் தயாரிப்பு பொறுப்பு உடையவர் அல்ல.

தயாரிப்பு என்பது சட்டப்பூர்வமாக ஒரு நிபுணர் அல்லது நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் தயாரிப்பானது   உற்பத்தியாளரால் வழங்கப்பட்ட பின்னர் எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தலுடன் வழங்கப்பட்ட நிலையில் அதனை மீறி செயல்பட்டு தீங்கு ஏற்படும் போது உற்பத்தியாளர் தயாரிப்பு பொறுப்புடையவர் அல்ல.

தயாரிப்பை பயன்படுத்தும் போது பயன்படுத்துவர் மது அருந்தி இருந்தார் அல்லது மருத்துவரால்  பரிந்துரைக்கப்படாத மருந்தை உட்கொண்டிருந்தார் என்ற நிலையில் தீங்கு ஏற்படும் போது அந்த  தீங்கிற்கு உற்பத்தியாளர் பொறுப்புடையவர் அல்ல. 

ஒரு தயாரிப்பின் பொதுவான தன்மைகளை அனைவரும் அறிந்திருக்கக் கூடிய ஒன்று என்ற நிலையில் அதனை உற்பத்தியாளர் நுகர்வோருக்கு எச்சரிக்கை அல்லது அறிவுரை செய்யவில்லை எனக் கூறி உற்பத்தியாளர் மீது தயாரிப்பு நடவடிக்கை மேற்கொள்ள இயலாது.

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்