spot_img
April 1, 2025, 3:39 pm
spot_img

தவறான அறுவை சிகிச்சை காரணமாக வலது காலை இழந்த இளம் பெண், நுகர்வோர் நீதிமன்றங்களில் கால தாமதமாகும் நீதி உள்ளிட்ட உரை வீச்சுகளுடன் நுகர்வோர் சாமி

இன்று காலை நுகர்வோர் இதழ் அலுவலகத்திற்கு நுகர்வோர் சாமி வருகை புரிந்தார். அவருக்கு வணக்கம் செலுத்தி விட்டு “என்ன சாமி செய்திகள்? என்றேன் நான். 

“நுகர்வோர் நீதிமன்றங்களில் பாதிக்கப்படும் நுகர்வோரால் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டால் 90 நாட்களில் அதனை விசாரித்து தகுந்த உத்தரவுகளை வழங்க வேண்டும் என்பது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் சிறப்பு அம்சமாகும் (speedy disposal in consumer court). சிவில் நீதிமன்றங்களில் சிவில் விசாரணை முறை சட்டம் (civil procedure code) பின்பற்றப்படுகிறது. நுகர்வோர் நீதிமன்றங்களில் சிவில் நடைமுறை விசாரணை முறை சட்டத்தின் சில பகுதிகள் மட்டுமே பின்பற்றப்பட வேண்டும் என்று நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நுகர்வோர் நீதிமன்றங்களில் சிவில் நீதிமன்றங்களில் பின்பற்றும் நடைமுறைகள் அனைத்தையும் பின்பற்றுவதால் 90 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்குவதற்கு இயலாத நிலை ஏற்படுகிறது. இந்த நிலை மாறி நுகர்வோர் நீதிமன்றங்களில் விரைவான நீதி வழங்க தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்குமாறு தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் (High Court of Telangana)  ஓரிரு தினங்களுக்கு முன்னர் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்றார் நுகர்வோர் சாமி. “சரியான வழக்கு! இதுகுறித்து உயர்நீதிமன்றத்திலும் விரைவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன் சாமி” என்றேன் நான். 

“இன்சூரன்ஸ் சமாதானன் என்ற அமைப்பில் சமர்ப்பிக்கப்படும் புகார்களில் 88 சதவீதம் மருத்துவ இன்சூரன்ஸ் கோரிக்கைகளை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நிராகரிக்கின்றன (health insurance claims) என்பதாகும். கடந்த மூன்று ஆண்டுகளில் மருத்துவ காப்பீடு இன்சூரன்ஸ் கோரிக்கைகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை மருத்துவ இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நிராகரித்து உள்ளது அல்லது பகுதி அளவு பணத்தை மட்டுமே வழங்கி உள்ளது என மணி டுடே என்ற இணையதள பத்திரிக்கை செய்து தெரிவிக்கிறது (bt money today). இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு (foreign direct investment) வரம்பை 74% இலிருந்து 100% ஆக உயர்த்துவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது” என்றார் நுகர்வோர் சாமி. 

“வெளிநாட்டு காப்பீட்டு நிறுவனங்களாகட்டும் அல்லது இந்திய காப்பீட்டு நிறுவனங்களாகட்டும் பாதிக்கப்படும் நுகர்வோரின் காப்பீட்டு கோரிக்கைகளை உடனடியாக வழங்குவது அவசியமானதாகும். ஆனால் தொழிற்சாலைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளுக்கு வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிப்பதில் தவறில்லை அதேசமயம் இன்சூரன்ஸ் போன்ற தொழிலுக்கு அதிக முதலீடு தேவையில்லை இந்திய மக்களின் பணத்தை பிரிமியமாக பெற்று நடத்தப்படும் இன்சூரன்ஸ் தொழிலில் இந்திய முதலீட்டாளர்களை ஊக்குவிக்கலாம் சாமி” என்றேன் நான்.

“கொல்கத்தாவை சார்ந்த 17 வயது இளம் பெண்ணுக்கு செய்யப்பட்ட   தவறான மருத்துவ அறுவை சிகிச்சையால் (surgery) பாதிக்கப்பட்டு உடல் முழுவதும் தொற்று பாதிக்காமல் இருக்க அவரது வலது கால்  அகற்றப்பட்டது. இளம் பெண்ணுக்கும் அவனது குடும்பத்தாருக்கும் கடுமையான மன உளைச்சலும் மருத்துவச் செலவுகளும் தவறான மருத்துவ சிகிச்சையால் (medical negligence) ஏற்பட்டது என்ற வழக்கில் கடந்த பிப்ரவரி 28 அன்று தேசிய நுகர்வோர்ஆணையம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

இந்த இளம் பெண்ணுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதற்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் கவனக்குறைவாக பசை (glue) ஒன்றை உடலில் சிதறவிட்டனர். இதன் காரணமாக வலது காலின் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு வலது காலில் முழுமையான தொற்று ஏற்பட்டு விட்டது. அறுவை சிகிச்சை செய்த மருத்துவரும் மருத்துவமனையும் கவனக் குறைவாக மருத்துவ சிகிச்சை வழங்கியதால்தான் அந்தப் பெண்ணுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

கவனக்குறைவான அறுவை சிகிச்சையால் 90% ஊனமடைந்துள்ள (disability) இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கும் சிரமங்களுக்கும் நிவாரணமாக ரூபாய் 75 லட்சத்தைம் முதலில் செய்யப்பட்ட தவறான சிகிச்சைக்காகவும்   அதனால் ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்ய கொல்கத்தாவில் இருந்து விமானத்தில் புது டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு புதுடெல்லி மருத்துவமனையில் செய்யப்பட்ட சிகிச்சைக்காகவும் இளம் பெண்ணின் குடும்பத்தார் செய்த செலவு ரூ 9,50000/-, வழக்கு செலவு ரூ 50,000/ஆக ரூபாய் பத்து லட்சத்தையும் தவறிழைத்த மருத்துவரும் மருத்துவமனையும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வழங்க வேண்டும் என்றும் தேசிய நுகர்வோர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது” என்றார் நுகர்வோர் சாமி.

“இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தீர்ப்பை பெற பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏழு ஆண்டு காலம் ஏற்பட்டுள்ளது சாமி” என்றேன் நான். அதனை கவனிக்காதது போல் பேசத் தொடங்கினார் நுகர்வோர் சாமி. “நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது போல மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில்களை (consumer councils) அமைக்க வேண்டும் 2019 ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்ட போதிலும் தமிழக முற்பட பல மாநிலங்களில் இந்த கவுன்சில்கள் அமைக்கப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது” என தெரிவித்து விட்டு கிளம்பினார் நுகர்வோர் சாமி. “ஒவ்வொரு வாரமும் வாருங்கள் – தங்கள் உரைவீச்சை தாருங்கள் சாமி” என்று கூறி அவரை வழி அனுப்பி வைத்தேன்.

நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: கவனக்குறைவான மருத்துவ சிகிச்சையால் பாதிக்கப்பட்டவர்கள் புகாரை நிரூபிப்பது எளிமையானது அல்ல. இதனால், பாதிக்கப்படும் நுகர்வோருக்கு உரிய தீர்வு கிடைப்பதில்லை இத்தகைய நிலையை மாற்றிட தகுந்த வழிமுறைகளை கண்டறிந்து அமல்படுத்த தகுந்த நடவடிக்கைகள் தேவையானதாக உள்ளது.

(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)  
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  
 
வாக்காளரியல் என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்