இன்று காலை நுகர்வோர் இதழ் அலுவலகத்திற்கு நுகர்வோர் சாமி வருகை புரிந்தார். அவருக்கு வணக்கம் செலுத்தி செலுத்தி விட்டு “என்ன சாமி செய்திகள்? என்றேன் நான். “புதுடில்லியில் தலைமையகத்தை கொண்டுள்ள விசன் ஐஏஎஸ் பயிற்சி மையம் நாட்டில் பல்வேறு இடங்களில் கிளை அலுவலகங்களை அமைத்து செயல்பட்டு வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டின் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமை பணி தேர்வுகளில் அனைத்திந்திய அளவில் முதல் 10 இடங்களையும் பிடித்தவர்கள் தங்களது மையத்தில் பயின்றதாக அவர்களது புகைப்படத்துடன் விளம்பரத்தை விசன் ஐஏஎஸ் பயிற்சி மையம் வெளியிட்டு இருந்தது. ஆனால், இந்த பட்டியல் தவறானது குற்றச்சாட்டில் விசாரணையை மேற்கொண்ட மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் விஷன் ஐஏஎஸ் பயிற்சி மையம் தவறான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது என உறுதி செய்து விசன் ஐஏஎஸ் பயிற்சி மையத்துக்கு ரூபாய் மூன்று லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதை போலவே போலி விளம்பரங்களை வெளியிட்ட 23 பயிற்சி மையங்களுக்கு ரூபாய் 74 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” என்றார் நுகர்வோர் சாமி.
(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)
“பதாஞ்சலி நிறுவனம் விற்பனை செய்யும் மிளகாய் பொடி பாக்கெட்டுகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பூச்சிக்கொல்லி மருந்து இருந்ததாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு கண்டறிந்தது. 200 கிராம் பாக்கெட்டுகளாக விற்பனைக்கு அனுப்பப்பட்ட 4000 கிலோ மிளகாய் பவுடரை சந்தையில் இருந்து திரும்பப் பெறுமாறு பதஞ்சலி நிறுவனத்திற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர அமைப்பு உத்தரவிட்டுள்ளது” என்றேன் நான்.
“தேனியைச் சேர்ந்த 85 வயதாகும் கோமதி என்ற ஓய்வு பெற்ற தனியார் பள்ளி ஆசிரியை கடந்த 2014 ஆம் ஆண்டு 29 பவுன் நகைகளை தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் அடமானம் வைத்துள்ளார். பின்னர் கடனை செலுத்தி விட்டு நகைகளை திரும்ப கேட்டபோது மோசடியான நகைகள் அடமானம் வைக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெறுவதாக கூறி நகைகளை திரும்ப வங்கி வழங்கவில்லை. இதனால், மனம் உடைந்த ஆசிரியை தேனி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இதனை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 26 பவுன் நகைகளுக்கான பணத்தையும் இழப்பீடாக ரூபாய் 50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கடந்த வாரத்தில் உத்தரவிட்டுள்ளது” என்றார் நுகர்வோர் சாமி.
“பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டதாக தவறான முத்திரையை பதித்து வழங்கிய பாஸ்போர்ட் அலுவலகம் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கர்நாடக மாநிலத்தில் உள்ள தார்வாட் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் கடந்த வாரத்தில் உத்தரவிட்டுள்ளது” என்றேன் நான்.

“நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையில் நேற்று இந்திய குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக அலுவலக உதவியாளராக பணியாற்றி இம்மாத இறுதியில் ஓய்வு பெற உள்ள அலுவலக உதவியாளரை கௌரவிக்கும் வகையில் அவரை தேசிய கொடியை ஏற்றுமாறு நீதிபதி கேட்டுக் கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து அலுவலக உதவியாளர் நாகராஜ் தேசிய கொடியை ஏற்றினார். அலுவலக உதவியாளர்கள் ரவிச்சந்திரன் மற்றும் நாகராஜ் ஆகியோருக்கு நீதிபதி ராமராஜ் பொன்னாடை போர்த்தி கௌரவத்துள்ளார். நேற்று முன்தினம் நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் வாக்காளர் விழிப்புணர்வு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் நீதிமன்ற பணியாளர்களும் வழக்கறிஞர்களும் திரளாக கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது” என தெரிவித்து விட்டு கிளம்பினார் நுகர்வோர் சாமி. “ஒவ்வொரு வாரமும் வாருங்கள் – தங்கள் உரைவீச்சை தாருங்கள் சாமி” என்று கூறி அவரை வழி அனுப்பி வைத்தேன்.


“நுகர்வோர் பூங்கா” படிக்க இங்கே தொடுங்கள்! (Click here)
பூங்கா இதழ் நுகர்வோர் பூங்கா வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்! இணைய இங்கே தொடவும். Click Here!
எங்களது வெளியீடுகள் (Our Current and Upcoming publication) – இதழ்களின் பெயரை தொட்டால் இதழ்களின் இணையதளத்துக்கு செல்லலாம் (Click the heading of journals, see the concern website) |
வெகுஜன வெளியீடுகள் (Popular Park) |
நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ் |
நுகர்வோர் பூங்கா (ஆங்கிலம்) – இணைய இதழ் |
பூங்கா இதழ் (தமிழ்) – இணைய இதழ் |
தி நியூஸ் பார்க் (ஆங்கிலம்) – இணைய இதழ் |
தி நியூஸ் பார்க் மொபைல் பயன்பாடு (Mobile App) – soon |
ஆராய்ச்சி வெளியீடுகள் (Research Park) |
சட்டம், மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி இதழ் |
சர்வதேச நிறுவனங்கள், அரசியலமைப்பு சட்டம், ஆட்சியியல் ஆராய்ச்சி இதழ் |
குற்றங்கள், விபத்துகள், குற்றவியல் சட்டம், பாதிக்கப்பட்டோரியல் ஆராய்ச்சி இதழ் |
அமைதி உத்திகள் மற்றும் ஆராய்ச்சி இதழ் |
விண்வெளி, கடல், ஆகாயம் ஆராய்ச்சி இதழ் |
வாக்காளரியல் (Voterology) ஆராய்ச்சி இதழ் |