இன்று காலை நுகர்வோர் இதழ் அலுவலகத்திற்கு நுகர்வோர் சாமி வருகை புரிந்தார். அவருக்கு வணக்கம் செலுத்தி செலுத்தி விட்டு “என்ன சாமி செய்திகள்? என்றேன் நான். “தனியாருக்குச் சொந்தமான நிலங்களில், மின்கம்பம் நடப்பட்டிருந்தால், அவைகளை இடமாற்றம் செய்வதற்கு நிலத்திற்குச் சொந்தக்காரர் மனு அளித்து மாற்றம் செய்யப்பட வேண்டும் என கூறினால் அதற்குரிய செலவுத் தொகைகள் அனைத்தும் மின்சார வாரியமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற கிளை மதுரை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது” என்றார் நுகர்வோர் சாமி. (WA No:932/2010 & M.P.(MD) No 2/2010).
“கிரெடிட் கார்டுகளுக்கு 30 சதவீதத்துக்கு மேல் வட்டியை விதிக்க கூடாது என தேசிய நுகர்வோர் ஆணையம் வழங்கியிருந்த தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. கிரெடிட் கார்டு நிறுவனங்களே வட்டிகளை விகிதங்களை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றால் நிலைமை மோசமாகும் என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்றார் நுகர்வோர் சாமி.
“அரசுடைமை வங்கிகள் தனியார் நிறுவனங்களுக்கு கடன் கணக்குகளை விற்பனை செய்வது தொடர்பாக சமீபத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் வழங்கிய தீர்ப்பு வசூல் நிறுவனங்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது” என்றேன் நான்.
(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ் தொடர்கிறது)
“வங்கிகளில் கடன் வாங்கி விட்டு அதனை முறைப்படி செலுத்தாதது சரி என்றும் வரா கடன் கணக்குகளை கடன்களை தனியார் நிறுவனங்களுக்கு வங்கிகள் விற்பனை செய்வதும் தவறானது என்றும் கூற முடியாது. ஆனால், வங்கியில் கடன் பெற்றவர்களின் கடன் கணக்குகளை வேறு நிறுவனத்துக்கு விற்பனை செய்யும் போது கடன் பெற்றவர்களுக்கு தங்களது கடன் கணக்கு இந்த தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டு விட்டது, இனிமேல் வங்கிக்கும் தங்கள் கடன் கணக்கும் தொடர்பில்லை. கடன் கணக்கை வாங்கிய நிறுவனத்திலேயே தாங்கள் கணக்கு பிரச்சனையை முடித்துக் கொள்ள வேண்டும் என்று வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் தெரிவிப்பது அவசியமானதாகும். இவ்வாறு வங்கிகள் வாடிக்கையாளருக்கு தெரிவிக்காமல் கடன் கணக்கை விற்பதும் நேர்மையற்ற ஒப்பந்தம் அல்லது நேர்மையற்ற வணிக நடைமுறை எனலாம்” என்றார் நுகர்வோர்சாமி.
“வங்கிகளிடமிருந்து கடன் கணக்குகளை வாங்கிய நிறுவனமும் முறைப்படி கடன் பெற்றோருக்கு கடிதம் மூலமாக தாங்கள் இந்த வங்கியில் வாங்கி இருந்த கடனை செலுத்தாததால் கடன் கணக்கை வங்கி தங்களுக்கு விற்று விட்டது என அறிவிக்க வேண்டும். அதன் பின்னரே வசூல் நடவடிக்கைகளை தொடங்க வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால், அந்த நிறுவனங்கள் நேர்மையற்ற வணிக நடைமுறையை பின்பற்றுவதாகவே கூறலாம் சாமி” என்றேன் நான்.
“தரம் குறைந்த பொருட்களை விநியோகிப்பது நுகர்வோர் உரிமைகளுக்கு எதிரானது என தெரிவித்து அத்தகைய பொருட்களை விநியோகித்தவர் வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது. பொதுவாக, நுகர்வோர் நீதிமன்றங்களில் இன்சூரன்ஸ், வங்கி போன்ற நிறுவனங்கள் மீது பல வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. ஆனால், தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் உணவகங்கள், பேக்கரிகள், தேநீர் கடைகள் மீதும் உணவு தயாரிக்க தேவைப்படும் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மீதும் வழக்கு தாக்கல் செய்யலாம் என்ற விழிப்புணர்வு மக்களிடையே அதிகமாக இல்லை” என்றார் நுகர்வோர் சாமி.
“பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் புற்றீசல் போல் நுகர்வோர் சங்கங்களை ஆரம்பித்து அதன் சார்பாக வழக்கு தாக்கல் செய்வதால் உண்மையான நுகர்வோர் சங்கங்களின் மதிப்பு பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு வழக்கறிஞர் அல்லாதவர்கள் நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்வதை கட்டுப்படுத்தும் வகையில் தீர்ப்பு ஒன்றை சமீபத்தில் டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கி உள்ளது” என்றேன் நான்.
“தமிழகத்தில் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இருக்க வேண்டிய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில்கள் 2019 ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட பின்பு அமைக்கப்படவில்லை. ஆனால், நாமக்கல் மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்புக் கவுன்சில் அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீரம் ராமராஜ் அவர்களுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது” என தெரிவித்து விட்டு கிளம்பினார் நுகர்வோர் சாமி. “ஒவ்வொரு வாரமும் வாருங்கள் – தங்கள் உரைவீச்சை தாருங்கள் சாமி” என்று கூறி அவரை வழி அனுப்பி வைத்தேன்.
நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்பது நுகர்வோர் ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.
பூங்கா இதழ் நுகர்வோர் பூங்கா வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்! இணைய இங்கே தொடவும். Click Here!
எங்களது வெளியீடுகள் (Our Current and Upcoming publication) – இதழ்களின் பெயரை தொட்டால் இதழ்களின் இணையதளத்துக்கு செல்லலாம் (Click the heading of journals, see the concern website) |
வெகுஜன வெளியீடுகள் (Popular Park) |
நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ் |
நுகர்வோர் பூங்கா (ஆங்கிலம்) – இணைய இதழ் |
பூங்கா இதழ் (தமிழ்) – இணைய இதழ் |
தி நியூஸ் பார்க் (ஆங்கிலம்) – இணைய இதழ் |
தி நியூஸ் பார்க் மொபைல் பயன்பாடு (Mobile App) – soon |
ஆராய்ச்சி வெளியீடுகள் (Research Park) |
சட்டம், மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி இதழ் |
சர்வதேச நிறுவனங்கள், அரசியலமைப்பு சட்டம், ஆட்சியியல் ஆராய்ச்சி இதழ் |
குற்றங்கள், விபத்துகள், குற்றவியல் சட்டம், பாதிக்கப்பட்டோரியல் ஆராய்ச்சி இதழ் |
அமைதி உத்திகள் மற்றும் ஆராய்ச்சி இதழ் |
விண்வெளி, கடல், ஆகாயம் ஆராய்ச்சி இதழ் |
வாக்காளரியல் (Voterology) ஆராய்ச்சி இதழ் |