spot_img
December 3, 2024, 10:17 pm
spot_img

நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில்களை அமைப்பதில் தாமதம், சுங்க கட்டணம், பெட்ரோல், டீசல் விலை உள்ளிட்ட உரைவீச்சுகளுடன் நுகர்வோர் சாமி

நீண்ட நாட்கள் கழித்து இன்று அதிகாலையிலேயே நுகர்வோர் சாமி நுகர்வோர் இதழ் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார். அவருக்கு வணக்கம் செலுத்தி அமரச் செய்து சூடான காபி கொடுத்தேன். “காபியை  பருகிக்கொண்டே காபியிலும் கலப்படம், தேநீரிலும் கலப்படம்” என்றார். “என்ன சாமி சொல்கிறீர்கள்?” என கேட்டதற்கு “உணவு பாதுகாப்பு  துறை எத்தனை நடவடிக்கைகளை எடுத்தாலும் கலப்பட உணவுகளை தயாரித்து விற்பனை செய்தது வருவது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது”  என்றார் நுகர்வோர் சாமி.

“மாவட்டங்களில் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் அமைக்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்து, அதற்கான வழிமுறைகளை வகுத்து விதிகளை கடந்த 2023 டிசம்பர் மாதத்தில் வெளியிட்டு விட்டது. ஆனால், எந்த மாவட்டத்திலும் மாவட்ட நுகர்வோர் கவுன்சில் தற்போது வரை அமைக்கவில்லை” என்றார் நுகர்வோர் சாமி. “மாவட்ட நுகர்வோர் கவுன்சில் அமைத்தால் எல்லாம் சரியாகிவிடுமா? சாமி” என கூறியதற்கு சர்க்கரை உண்டு இல்லாத ஊரில் இலுப்பை பூ சர்க்கரை என்பது போல குறைந்தபட்ச செயல்பாடு மாவட்ட நுகர்வோர் கவுன்சில் அமைக்கப்பட்ட இருக்கும்” என்றார் நுகர்வோர் சாமி. 

“சாமி! தேசிய நெடுஞ்சாலை சுங்க கட்டணங்களால் நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்” என்று நான் கூறியதும், “50 சதவீதத்துக்கு மேல் பராமரிப்பு நடைபெறும் தேசிய நெடுஞ்சாலைகளில் கூட கட்டணங்கள் தொடர்ந்து வசூலிக்கப்படுவது சரியானது அல்ல என்று  சமீபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். பொதுவாக முழுமையான உபயோகத்துக்கு நெடுஞ்சாலை இல்லாத போது சுங்க கட்டணங்கள் ரத்து செய்வதுதான் சரியானது” என்றார் நுகர்வோர் சுவாமி.

“மருத்துவ இன்சூரன்ஸ், ஜெனரல் இன்சூரன்ஸ், லைப் இன்சூரன்ஸ் போன்ற பாலிசிகளை எடுக்கும் போது அதன் முழுமையான விவரங்களை படித்துப் பார்க்காமல் வாடிக்கையாளர்கள் கையொப்பம் செய்து விடுகிறார்கள். பின்னர், ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு காப்பீட்டுத் தொகையை கேட்க சென்றால் காப்பீட்டு நிறுவனங்கள் விதிகளை கூறி பணத்தை தர மறுப்பது வாடிக்கையாகி நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்வது அதிகரித்துள்ளது. இதனால், இன்சுரன்ஸ் பாலிசி எடுக்கும் போது மேற்கொள்ளப்பட வேண்டிய அம்சங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டியது அவசியமானதாகும் என்று உரை வீச்சு செய்த நுகர்வோர் சாமி. 

“எங்கே சாமி? நூறு நுகர்வோர்களுக்கு பிரச்சனை என்றால் நான்கு நுகர்வோர் மட்டுமே நுகர்வோர் நீதிமன்றத்துக்கு செல்வதாக ஆய்வு அறிக்கை சொல்கிறது” என்றேன் நான். “நீயும் புள்ளி விவரங்களை வைத்திருக்கிறாய், சபாஷ்” என பாராட்டிய நுகர்வோர் சாமி, “நுகர்வோர் விழிப்புணர்வை அதிகரிக்க நுகர்வோர் நீதிமன்றங்களில் நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் சட்ட உதவி மையத்தை அனைத்து மாவட்டங்களிலும் அமைப்பது அவசியம்” என்றார். 

“தவறான வழிகாட்டுதல்களை வழங்கும் விளம்பரங்களை   செய்பவர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய இயலாத நிலை உள்ளது. இதனை மாற்றி தவறான வழிகாட்டும் விளம்பரங்களால் பாதிக்கப்படும் மக்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும் வகையில் சட்டத்தை மாற்ற வேண்டுமென்றால் நுகர்வோர் சாமி.

“கச்சா எண்ணெய் விலை மிகக் கடுமையாக குறைந்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? என்று மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருந்த தருணத்தில் குறைந்து மத்திய கிழக்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள இஸ்ரேலுக்கும் லெபனான், ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ள போர் பதட்டம் காரணமாக கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரும் நிலமை ஏற்பட்டுள்ளது ஏற்பட்டுள்ளது” என்று கூறிவிட்டு கிளம்பினார் நுகர்வோர் சாமி. “ஒவ்வொரு வாரமும் வாருங்கள் – தங்கள் உரைவீச்சை தாருங்கள் சாமி” என்று கூறி அவரை வழி அனுப்பி வைத்தேன்.

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்