spot_img
November 21, 2024, 6:19 pm
spot_img

நுகர்வோரை பாதிக்கும் நியாயமற்ற வணிக நடைமுறை என்றால் என்ன? என்பதை அறிந்து கொள்ளுங்கள்

நியாயமற்ற வணிக நடைமுறை (unfair trade practice), நியாயமற்ற ஒப்பந்தம் (unfair contract),   கட்டுப்படுத்தப்பட்ட நடைமுறை (restrictive trade practice) போன்றவற்றை பொருளின் உற்பத்தியாளர், விற்பனையாளர், ஒரு சேவையை வழங்குபவர் பின்பற்றுவதால் நுகர்வோர் பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் நியாயமற்ற வர்த்தக நடைமுறை என்ன என்று சட்டம் வரையறை செய்துள்ளதை ஒவ்வொருவரும் தெரிந்து கொண்டால் நாம் ஏமாற்றங்களிலிருந்து தப்பிக்கலாம்.

“நியாயமற்ற வர்த்தக நடைமுறை” என்பது, எந்தவொரு பொருட்களின் விற்பனை, பயன்பாடு அல்லது விநியோகத்தை ஊக்குவிக்கும் நோக்கத்திற்காகவும்   ஒரு சேவையை வழங்குவதற்காகவும் பின்வரும் நடைமுறைகளில்    நியாயமற்ற முறையை அல்லது   ஏமாற்றும் நடைமுறையை  பின்பற்றும் ஒரு வர்த்தக நடைமுறையாகும்.

எந்தவொரு அறிக்கை, வாய்வழியாக,  எழுத்து மூலமாக, அல்லது மின்னணுப் பதிவேடு உட்பட காணக்கூடிய பிரதிநிதித்துவத்தின் மூலமாகவோ, மின்னணு சாதனங்கள் மூலமாக கீழ்க்கண்டவாறு தவறான தகவல்களை வழங்குவது நியாயமற்ற வர்த்தக   நடைமுறைகளாகும்.

  • தங்களது பொருட்கள் அல்லது தங்களால் வழங்கப்படும் சேவை ஒரு குறிப்பிட்ட தரம், அளவு, கலவை,  மாதிரி (a particular standard, quality, quantity, grade, composition, style or model) இருக்கும் என்று தவறாக தெரிவிப்பது.
  • மறுகட்டமைக்கப்பட்ட, பயன்படுத்தப்பட்ட, புதுப்பிக்கப்பட்ட, மறுசீரமைக்கப்பட்ட அல்லது பழைய பொருட்களை (re-built, second-hand, renovated, reconditioned or old goods) புதிய பொருட்கள் என்று  தவறாக தெரிவிப்பது.
  • தங்களது பொருட்களுக்கு அல்லது தங்களால் வழங்கப்படும் சேவைகளுக்கு ஸ்பான்சர்ஷிப் அல்லது அங்கீகாரம் எதுவும் இல்லாத நிலையில் அவ்வாறு இருப்பதாக தவறாக தெரிவிப்பது. 
  • தங்களது பொருட்கள் அல்லது தங்களால் வழங்கப்படும் சேவைகளுக்கு ஒரு குறிப்பிட்ட செயல் திறன், பண்புகள், துணைக்கருவிகள் (performance, characteristics, accessories) இல்லாத நிலையில் இருப்பதாக தெரிவிப்பது.
  • தங்களது பொருட்கள் அல்லது தங்களால் வழங்கப்படும் சேவைகளால் குறிப்பிட்ட பயன்கள் (uses or benefits) இல்லாத நிலையில் அவ்வாறு இருக்கும் என்று தவறாக தெரிவிப்பது.
  • தங்களது பொருட்கள் அல்லது தங்களால் வழங்கப்படும் சேவை  குறிப்பிட்ட தேவைக்கு அவசியமானது அல்லது குறிப்பிட்ட பயனை வழங்குகிறது என்று தவறான தகவல்களை தெரிவிப்பது.
  • முறையான சோதனையின் அடிப்படை இல்லாமல் ஒரு பொருளின் செயல் திறன் அல்லது ஆயுள் காலம் (performance, efficacy or length of life of a product or of any goods) போன்றவற்றிற்கு தவறாக வாரண்டி தருவது அல்லது கேரண்டி வழங்குவது.
  • தங்களது பொருட்கள் அல்லது தங்களால் வழங்கப்படும்  சேவைகளுக்கு வாரண்டி அல்லது கேரண்டி இல்லாத நிலையில் அவை இருப்பது போல சித்தரிப்பது.
  • ஒரு பொருளின் பழுதாகும் பகுதியை மாற்றி தருவது, பழுதை சரி செய்து தருவது, சேவையை தொடர்ந்து பராமரிப்பது போன்றவை எதனையும் விற்பனையாளர் அல்லது சேவை வழங்குபவர் வழங்காத நிலையில் அவற்றை வழங்குவது போல உத்தரவாதம் அளிப்பது.
  • விற்பனை செய்யப்படும் பொருள் அல்லது சேவையின் விலையை தவறாக சித்தரிப்பது.
  • ஒரு உற்பத்தியாளர் அல்லது விற்பனையாளர் அல்லது சேவை வழங்குபவர் மற்றொரு நபரின் பொருட்கள், சேவைகள் அல்லது வர்த்தகத்தை இழிவுபடுத்தும் தவறான   தகவல்களை  வெளியிடுவது.
  • விற்பனை செய்யப்படும் ஒரு பொருளுக்கு அல்லது வழங்கப்படும் சேவைக்கு  விலையில் தள்ளுபடி எதுவும் வழங்காமல் அவ்வாறு வழங்குவதாக கூறி விளம்பரம் செய்வது. 
  • பொருளை விற்பனை செய்யும் போது அல்லது சேவையை வழங்கும் போது அன்பளிப்பு, பரிசு போன்றவற்றை தருவதாக விளம்பரம் செய்து ஆனால் அவற்றை தரக்கூடிய எண்ணம் இல்லாமல் இருப்பது அல்லது விற்பனை செய்யப்படும் அல்லது வழங்கப்படும் சேவைக்குரிய பணத்திலேயே அந்த அன்பளிப்பு,   பரிசு ஆகியவற்றிற்கான கட்டணத்தை உள்ளடக்குவது.
  • பொருட்களை பதுக்கி வைத்தல் அல்லது அழித்தல் அல்லது பொருட்களை விற்பனை செய்ய மறுப்பது அல்லது சேவையை வழங்க மறுப்பது ஆகியவற்றின் மூலம் சந்தையில் அந்த பொருளின் விலையை அல்லது சேவையின் விலையை உயர்த்த முயற்சிப்பது.
  • போலியான பொருட்களை உற்பத்தி செய்தல் அல்லது அத்தகைய பொருட்களை விற்பனைக்கு வழங்குதல் அல்லது சேவைகளை வழங்குவதில் ஏமாற்றும் நடைமுறைகளை பின்பற்றுதல்.
  • விற்கப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளுக்கான ரசீதை வழங்காமல் இருப்பது. (வழங்கப்படும் ரசீது எவ்வாறு இருக்க வேண்டும் என்று ஏற்கனவே தனி கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது)
  • பில் அல்லது ரொக்க மெமோ அல்லது ரசீதில் குறிப்பிடப்பட்ட காலத்திற்குள் – அவ்வாறு குறிப்பிடாத நிலையில் முப்பது நாட்களுக்குள், பொருட்களை விற்ற பிறகு அல்லது சேவைகளை வழங்கிய பிறகு, குறைபாடுள்ள பொருட்களை திரும்பப் பெறவோ அல்லது  குறைபாடுள்ள சேவைகளை திரும்பப் பெறவோ அல்லது நிறுத்தவோ மறுப்பது.  
  • நுகர்வோர் விற்பனையாளருக்கு அல்லது சேவை வழங்குபவருக்கு நம்பிக்கையுடன் வழங்கப்பட்ட தனிப்பட்ட தகவல்களை பிறருக்கு வழங்குவது.

நியாயமற்ற ஒப்பந்தம் (unfair contract),   கட்டுப்படுத்தப்பட்ட நடைமுறை (restrictive trade practice) ஆகியவை பற்றி விரைவில் தனி கட்டுரையாக பார்க்கலாம்.

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்