spot_img
July 27, 2024, 12:08 pm
spot_img

நீங்களும் நோபல் பரிசை வெல்லலாம்

இந்த உலகத்திற்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய சிந்தனையாளர்களுக்கு நோபல் பரிசு அமைப்பினரால் ஒவ்வொரு ஆண்டும் கடந்த 1901 ஆம் ஆண்டு முதல் முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மிகப் பெரும் செல்வந்தர் ஆல்பிரட் நோபல் எழுதிய உயிலில் தமது இறப்புக்குப் பின்பு தமது சொத்துக்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும்   இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மருத்துவம் ஆகிய துறைகளில் சிறந்த பங்களிப்பை  வழங்குபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கி வெகுமதியை (cash award) அளித்து கௌரவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். 

1895 ஆம் ஆண்டு ஆல்பிரட் நோபல் இறந்த பின்னர் அமைக்கப்பட்ட நோபல் பரிசு அமைப்பானது (Noble Prize Foundation) கடந்த 1901 ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கி வருகிறது.  ஸ்வீடன் மத்திய வங்கி இறந்த நோபல் ஆல்பிரட் நினைவாக பொருளாதாரத்திற்கும் நோபல் பரிசு வழங்க பரிந்துரை செய்ததன் மூலம் கடந்த 1969 ஆம் ஆண்டு முதல்   பொருளாதாரத்தில் சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களுக்கும் ஆண்டுதோறும்   நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 

நோபல் பரிசு பெறுபவருக்கு 24 கேரட்   தங்க மெடலும் பட்டயமும் பணப்பரிசும் வழங்கப்படுகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்கள் பெற்ற பணத்தின் மதிப்பு சுமார் இந்திய ரூபாயில் சுமார் எட்டரை கோடியாகும். இந்த பரிசு பொதுவாக தனி நபர்களுக்கு வழங்கப்பட்டாலும் சில நேரங்களில் மூன்றுக்கும் மேற்படாத நபர்களுக்கு கூட்டாகவும் (jointly, but not more than 3 person) சில நேரங்களில் சிறந்த அமைப்புகளுக்கும்  (organizatins) வழங்கப்படுகிறது.

இதுவரை ஐந்து இந்தியர்களும் இந்தியாவில் பிறந்து வேறு நாட்டு  குடியுரிமை பெற்ற நால்வருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அமைதி, இயற்பியல், வேதியல், பொருளாதாரம், மருத்துவம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் நீங்களும் உயர்ந்த பங்களிப்பை சமுதாயத்திற்கு வழங்கினால் உங்களுக்கும் நோபல் பரிசு காத்திருக்கிறது.

கடந்த 1861 ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் கொல்கத்தாவில் பிறந்த கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் கடந்த 1913 ஆம் ஆண்டு இலக்கியத்துக்காக நோபல் பரிசு  பெற்ற முதல் இந்தியர் ஆவார்.
கடந்த 1888 ஆம் ஆண்டு தமிழகத்தில் திருச்சியில் பிறந்த விஞ்ஞானி  சி. வி. ராமன் என அழைக்கப்படும் சந்திரசேகர வெங்கடராமன் அவர்கள் கடந்த 1930 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு  பெற்ற இரண்டாவது இந்தியர் ஆவார்.
கடந்த 1910 ஆம் ஆண்டு வடக்கு மாசிடோனியாவில் பிறந்து இந்தியாவிற்கு வந்து இந்திய குடியுரிமை பெற்று வாழ்ந்த சமூக சேவகர் அன்னை தெரசா அவர்களுக்கு கடந்த 1979 ஆம் ஆண்டு சமூக சேவையின் மூலம் ஆற்றிய தொண்டுக்காக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
கடந்த 1933 ஆம் ஆண்டு இந்தியாவில் மேற்கு வங்கத்தில் சாந்தி நிகேதன் என்ற இடத்தில் பிறந்த பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் கடந்த 1998 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கு அவர் ஆற்றிய பணிக்காக நோபல் பரிசு பெற்றார்.
மத்திய பிரதேசத்தில் 1954 ஆம் ஆண்டு பிறந்த கைலாஷ் சத்யார்த்தி அவர்களுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு குழந்தைகள் உரிமைகள் மேம்பாட்டிற்கு ஆற்றிய பணிகளுக்காக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
நீங்களா? அடுத்தது
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்