spot_img
July 27, 2024, 9:18 am
spot_img

நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் கட்டிட ஒப்பந்ததாரர் சரண். வங்கி இன்சூரன்ஸ் மேனேஜர்களுக்கு வாரண்டு. பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு 22.2 லட்சம் இழப்பீடு வழங்கல்.

நாமக்கல்லில் உள்ள அழகு நகரில் வசித்து வருபவர் ராமசாமி மனைவி கலைவாணி (50). இவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டுவதற்கு கடந்த 2020 ஆம் ஆண்டு திருச்சி, கண்டோன்மென்ட், பாரதி சாலையில் உள்ள ரோஷன் குரூப் ஆப் கம்பெனிஸ், நிர்வாக இயக்குனர், சுப்பிரமணியன் மகன் சதீஷ் பாபு என்பவரிடம் கலைவாணி ஒப்பந்தம் செய்துள்ளார்.  ரூபாய் 48 லட்சத்தை   கலைவாணியிடம் பெற்றுக் கொண்ட சதீஷ்குமார் ஒப்பந்தப்படி வீட்டை முழுமையாக கட்டித் தரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட கலைவாணி நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். 

வழக்கை விசாரித்த நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு வழக்கு தாக்கல் செய்தவருக்கு ரூ 30,00,000/- நான்கு வாரத்தில் கட்டிட ஒப்பந்ததாரர் வழங்க வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் தீர்ப்பு வழங்கியது. நான்கு வார காலத்திற்குள் பணத்தை செலுத்தாததால் சதீஷ்குமாரை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்று கலைவாணி கடந்த பிப்ரவரி மாதம்  நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  

விசாரணைக்கு பின்னர் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு சதீஷ்குமாரை கைது செய்ய நல்லிபாளையம் காவல் நிலைய இன்ஸ்பெக்டருக்கு கடந்த மாதம் உத்தரவிட்டனர். இந்நிலையில் 30-04-2024-ல் கட்டிட ஒப்பந்ததாரர் சதீஷ்குமார் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் நான்கு வார காலத்துக்குள் ரூபாய் 30 லட்சத்தை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

மற்றொரு வழக்கில் நாமக்கல் தும்ணாங்குறிச்சியில் உள்ள பெரியசாமியின் மனைவி சிவகாமிக்கு (40) அவரது கணவர் இறந்ததற்காக காப்பீட்டுத் தொகை ரூபாய் 50 லட்சமும்   இழப்பீட்டுத் தொகை ரூபாய் ஒரு லட்சமும் வழங்க வேண்டும் என்று எச்டிஎப்சி இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு கடந்த ஜூன் மாதம் நாமக்கல் மாவட்டம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த தொகையை வழங்காததால் சிவகாமி சமர்ப்பித்த   முறையீட்டை ஏற்று நாமக்கல் எச்டிஎப்சி இன்சூரன்ஸ் நிறுவன கிளை மேலாளரை கைது செய்யுமாறு காவல்துறைக்கு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு (30-04-2024) உத்தரவு பிறப்பித்தனர்.

மற்றொரு வழக்கில் நாமக்கல், நல்லிபாளையத்தை சேர்ந்த குழந்தைவேல் மகன் ரவிச்சந்திரன் என்பவருக்கு சேவை குறைபாட்டிற்காக நாமக்கல் கிளை ஐடிபிஐ வங்கி மேலாளர் ரூ 40,000/- வழங்க கடந்த 2022 அக்டோபர் மாதத்தில்  நாமக்கல் மாவட்ட  நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. நீதிமன்றம் உத்தரவிட்ட தொகையை வழங்கவில்லை என்று ரவிச்சந்திரன் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையீடு செய்ததை தொடர்ந்து நாமக்கல் ஐடிபிஐ வங்கி மேலாளரை கைது செய்யுமாறு காவல்துறைக்கு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு (30-04-2024) உத்தரவு பிறப்பித்தனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள  வெண்ணங்கல் காடு  கிராமத்தில் வசிக்கும் சுப்ரமணியத்துக்கு அவரது மகன் தமிழ்ச்செல்வன் இருசக்கர வாகன விபத்தில்   இறந்ததால் வழங்க வேண்டிய தனிநபர் காப்பீட்டு தொகையை வழங்குமாறு நாமக்கல்லில் உள்ள ஸ்ரீ ராம் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு கடந்த பிப்ரவரி மாதம் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு (30-04-2024) உத்தரவு பிறப்பித்தனர். தீர்ப்பின்படி இன்சூரன்ஸ் நிறுவனம் செலுத்திய ரூ 22,22,392/- க்கான   டிமாண்ட் டிராப்ட்யை நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் இன்று சுப்பிரமணியத்துக்கு வழங்கினார்.

Dr.V.Ramaraj, President @ District Judge Super Time Scale, DCDRC, Namakkal
சாஜ். ம
சாஜ். ம
சாஜ். ம, வழக்கறிஞர்/ சட்டக் கல்லூரி விரிவுரையாளர்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்