spot_img
July 27, 2024, 9:43 am
spot_img

இல்லாத எய்ட்ஸ் – இருப்பதாக தெரிவித்த மருத்துவமனை இழப்பீடு வழங்க உத்தரவு

இல்லாத நோய்

கடந்த 2017 டிசம்பர் மாதத்தில் கோயம்புத்தூர் சத்தியமங்கலம் சாலையில் உள்ள ஒரு தனியார் கண் மருத்துவமனைக்கு கண் பரிசோதனைக்காக கோயம்புத்தூர் நகர், பீளமேட்டில் வசித்து வரும் பெருமாள் மகன் கிருஷ்ணசாமி (71) சென்றுள்ளார்.  அந்த மருத்துவமனையில் கண்களை பரிசோதித்த மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறி அதற்கு முன்பாக   ரத்தம் மற்றும்   சிறுநீர் உள்ளிட்ட பரிசோதனைகளை செய்யுமாறு தெரிவித்துள்ளார்.  பரிசோதனைகளின் முடிவில் அவருக்கு எய்ட்ஸ் நோய் உள்ளதாக மருத்துவமனையினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணசாமி கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மற்றொரு தனியார் மருத்துவமனையிலும் பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு எய்ட்ஸ் நோய் இல்லை என்று மருத்துவ   அறிக்கையை வழங்கி உள்ளார்கள்.

பாதிப்புக்கு உள்ளான கிருஷ்ணசாமி கடந்த 2018 ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் எய்ட்ஸ் நோய்  இருப்பதாக தவறாக தெரிவித்த மருத்துவமனையின் மீது வழக்கு தாக்கல் செய்திருந்தார். விரைவான விசாரணைக்கு கடந்த 2022 ஜூலை மாதம் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ்   தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பில் மருத்துவமனை கவனக்குறைவுடன் செயல்பட்டு அலட்சியமான சேவை புரிந்துள்ளதால் வழக்கு தாக்கல் செய்தவருக்கு இழப்பீடாக ரூபாய் 5 லட்சத்தை  மருத்துவமனை நிர்வாகம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

அறுவை சிகிச்சை குறைபாடு

கோயம்புத்தூரில் உள்ள ஸ்டேட் பேங்க் காலனியில் வசித்து வரும் ராஜகோபாலன் மகன்  கிருஷ்ணமணி என்பவருக்கு கடந்த 2016 ஜூன் மாதம்     சாலை விபத்து ஏற்பட்டு வலது காலில்   முறிவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக துடியலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு முறிவு ஏற்பட்ட எலும்பு   ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் 12 நாட்கள் மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்து சிகிச்சை பெற்று வீட்டிற்கு வந்த பின்னரும்   அறுவை சிகிச்சை செய்த   காலில் காயம் குணமாகாமல் வீக்கம் அதிகரித்து காயத்திலிருந்து திரவம் தொடர்ந்து வந்துள்ளது.

இதுகுறித்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனையில் கிருஷ்ணமணி கூறிய போது அதனை சரி செய்ய மீண்டும்   பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யலாம் என தெரிவித்துள்ளனர். இதனை நம்பி மீண்டும் அதே மருத்துவமனையில்   அவருக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு   2016 ஆகஸ்ட் மாதத்தில் 15  நாட்கள் உள் நோயாளியாக   இருந்துள்ளார். 

 இதற்குப் பின்னர் நான்கு மாதங்கள் கழித்தும் அறுவை சிகிச்சை மூலம் சேர்க்கப்பட்ட எலும்புகள் ஒன்று சேராமல் தொடர்ந்து பிரச்சனை இருந்து வந்ததால்  கிருஷ்ணமணி கோயம்புத்தூரில் உள்ள வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று ஆலோசனை செய்துள்ளார்.   அவரை பரிசோதித்த மருத்துவர் முந்தைய அறுவை சிகிச்சையில் எலும்புகள் ஒன்று சேராதால் மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஒன்று சேர்க்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.  அந்த மருத்துவமனையில்   அவர் 2016 டிசம்பர் மாதத்தில்     அவரது வலது காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுவை சரி செய்ய   மீண்டும் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.

முதலில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனை கவனக்குறைவாக செயல்பட்டு சேவை குறைபாடு புரிந்ததாக  கிருஷ்ணமணி கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கு விரைவான விசாரணைக்காக கடந்த ஜூலை மாதம் நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு இருந்த நிலையில் கடந்த ஜூலை மாதத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பு வழங்கியது.

முதலாவது அறுவை சிகிச்சையில்   எலும்புகளை இணைக்க பயன்படுத்தப்பட்ட உபகரணம் (rod) சரியான நிலையில் பொருத்தப்படாததால் கிருஷ்ணமணிக்கு  அறுவை சிகிச்சை செய்த காலில் தொற்று   ஏற்பட்டு  காயத்தில் திரவகசிவு (liquid leak) தொடர்ந்துள்ளது.  இதனை சரி செய்ய இரண்டாவது அறுவை சிகிச்சையை செய்தும் பிரச்சனையும் சரியாகவில்லை.   வேறு   மருத்துவமனையில் மூன்றாவதாக அறுவை சிகிச்சை மூலம்  பிரச்சனை சரி செய்யப்பட்டுள்ளது என்பது  வாய்மொழி மற்றும் ஆவண சாட்சியம்   மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனால் கவனக்குறைவாக மருத்துவ சிகிச்சை அளித்து சேவை குறைபாடு புரிந்த மருத்துவமனை பாதிக்கப்பட்ட கிருஷ்ணமணிக்கு   ஏற்பட்ட மருத்துவச் செலவுகளுக்கான ரூபாய் இரண்டரை லட்சமும் மற்றும் அவருக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ரூபாய் இரண்டரை லட்சமும்  வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

சாஜ். ம
சாஜ். ம
சாஜ். ம, வழக்கறிஞர்/ சட்டக் கல்லூரி விரிவுரையாளர்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்