spot_img
June 21, 2024, 5:18 pm
spot_img

இது ஒரு இன்சூரன்ஸ் காலம் எச்சரிக்கை (சிறுகதை) – இசை கல்லூரியில் படிக்க ஆசையா? (சேர்க்கை விளம்பரம்)

இன்றைய நாளிதழில் இசை கல்லூரிகளின் படிப்புகளுக்கான (admission for music and fine arts college) சேர்க்கைக்கு வந்த விளம்பரத்தை பார்த்ததும் பழைய நினைவுகளில் மூழ்கிப் போனாள் பூர்ணிமா. ஒரு பிரபல இசை நிறுவனத்தின் இயக்குனராக பணியாற்றி வரும் அவளுக்கு 15 ஆண்டு காலத்துக்கு முந்தைய நினைவுகள் மனதில் வலம் வந்தன. 

பன்னிரண்டாம் வகுப்பு முடிந்து சில மாதங்களில் 18 வயது   நிறைவடைந்ததும் பெற்றோர் அவளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டனர். கணவர் பட்டப் படிப்பை படித்துவிட்டு அவரது பெற்றோர் செய்து வந்த நடுத்தர தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்தார். அதனை அபிவிருத்தி செய்வதற்காக திருமணம் நடந்த ஆறு மாதத்தில் 50 லட்சம் ரூபாயை வங்கியில் கடனாக பெற்றார். வங்கி நிர்வாகம் திடீரென கடன் வாங்குபவர் இறந்து விட்டால் கடனை   இன்சூரன்ஸ் மூலம் தீர்த்துக் கொள்ளும் வகையில் ஒரு பாலிசி எடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்கள். பூர்ணிமாவின் கணவரும் அதற்காக ரூ  52,000/- செலுத்தி பாலிசியை பெற்றார். 

கடன் பெற்ற ஆறு மாதத்தில் பூர்ணிமாவின் கணவருக்கு திடீரென தீவிர மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். மிகுந்த வேதனைக்கு உள்ளான பூர்ணிமாவுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய கணவரின் பெற்றோர் இவள் வந்த நேரம்  மகன் இறந்து விட்டதாக திட்டினார்கள். கணவரின் இறப்பால் நேரிட்ட வேதனையுடன் அவரது பெற்றோரின் பேச்சுக்கள் பூர்ணிமாவை தற்கொலை  செய்து கொள்ளலாமா? என்ற எண்ணத்துக்கு இழுத்துச் சென்றன. 

அந்த நேரத்தில் வந்த மற்றொரு செய்தி அவளை இடி போல் தாக்கியது. வங்கியில் வாங்கிய  கடனையும் வட்டியையும் திருப்பிச் செலுத்த வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. வங்கியில் சென்று இன்சுரன்ஸ் மூலம் கடனை கழித்துக் கொள்ளுமாறு கேட்டபோது கணவர் பெற்றிருந்த இன்சூரன்ஸ் ஆக்சிடென்ட் பாலிசி என்றும் விபத்தில் இறந்தால் மட்டுமே கடனை கழிக்க முடியும் என்றும் வங்கி மேனேஜர் தெரிவித்து விட்டார். வங்கி நிர்வாகம் சரியான பாலிசியை தேர்வு செய்து பணத்தை பெறாமல் அதிக கமிஷன் உள்ள பாலிசியை வழங்கி மோசடி செய்து விட்டது என்று அப்போதுதான் அவளுக்கு தெரியவந்தது.

வங்கியில் இருக்கிறோம் என்பதை கூட மறந்து விட்டு மேனேஜர் அறையிலேயே அழத்தொடங்கி விட்டாள் பூர்ணிமா. அப்போது எதிர்பாராத விதமாக பக்கத்து வீட்டு பங்கஜம் மேனேஜர்   அறைக்குள் வந்தார். பூர்ணிமா அழுவதை பார்த்து அதிர்ச்சியடைந்து அவளை வெளியில் அழைத்து வந்து கதையைக் கேட்டார். 

வங்கியில் அல்லது நிதி நிறுவனங்களில் கடன் வாங்கும் போதுஅவர்கள் கூறும் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அவர்கள் கூறும் பாலிசியை எடுக்கும் போது நிபந்தனைகளையும் விவரங்களையும் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இத்தகைய பிரச்சினையை சந்திக்க நேரிடும் என்று பங்கஜம் சொன்ன வார்த்தைகள் இன்னும் பூர்ணிமாவின் காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

 “உனக்கு இசையில் மிகுந்த ஆர்வம் உள்ளது. இன்றுதான் இசை கல்லூரியில் சேர விளம்பரம் வந்துள்ளது. மூன்றாண்டுகள் படிக்க  செல். செலவுகளை நான் ஏற்றுக்கொள்கிறேன். படித்த முடித்த பின்னர்  வேலைக்கு செல்வது மற்றும்   மறு திருமணம் செய்வது குறித்து முடிவெடு” என பங்கஜம் வீட்டுக்கு அழைத்து வந்து  கூறிய வார்த்தைகள் பூர்ணிமாவுக்கு நேற்று போல ஞாபகம் வந்தது. பங்கஜத்தின் மகன்கள் இருவரும்  படித்து முடித்த பின் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டதால் பூர்ணிமாவை பங்கஜம் மகளாகவே ஏற்றுக் கொண்டு விட்டார்.

இசைக்கல்லூரியில் சேர்ந்து இசையில் பட்டப் படிப்பை முடித்து பல வேலைகளை பார்த்து தற்போது நல்ல சம்பளத்துடன் பெரிய நிறுவனத்தில் இயக்குனராக பணி புரிவதற்கு பங்கஜம் அவர்கள்தான் தெய்வமாக வந்து உதவினார் என நினைத்தாள் பூர்ணிமா. அப்போது அறையின் கதவை யாரோ தட்டினார்கள். திறந்து பார்க்கும் போது பங்கஜம் அம்மா நின்றிருந்தார். “டிரைவர் வந்து விட்டார். இன்னும் சாப்பிடாமல் உள்ளாய்? எப்போது ஆஃபீஸ் செல்வது? என அவர் கேட்டார். பூர்ணிமா படித்து முடித்து ஊரிலிருந்து சென்னைக்கு வந்து வேலை பார்க்கத் தொடங்கிய நாள் முதல் பங்கஜமும் ஒரு அம்மாவாக தம்முடன் வந்துவிட்டதை நினைத்து பெருமைப்பட்டு அவரை கட்டி அணைத்துக் கொண்டாள் பூர்ணிமா.  திருமணம் முடிந்து ஒரு மாதத்தில் தாயை இழந்த பூர்ணிமாவுக்கு பங்கஜம்தான் அம்மாவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அம்மாவை தனியாக விட்டு விட்டு வெளிநாடு சென்றுவிட்ட மகன்களுக்கு பதிலாக பூர்ணிமா பங்கஜத்திற்கு மகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

சாப்பிட்டவுடன் பூர்ணிமா வேலைக்கு செல்வாள் என்று இருந்த நிலையில் அவள் தொலைபேசியை எடுத்து பலருக்கு போன் செய்து இசை கல்லூரி விளம்பரம் வந்துள்ளது. உங்கள் மகனை/மகளை சேர்க்க ஆசையா? என பலருக்கும் தகவல் தெரிவித்துக் கொண்டிருக்கிறார். 

இசைக்கல்லூரி என்றால் இசை மட்டும் அல்ல, பல கவின் கலைகளும் (fine arts) அங்கு கற்றுக் கொடுக்கப்படுகின்றன என்பது பலருக்கு தெரியாது. இங்கு கற்றுக் கொடுக்கப்படும் பாடங்கள் சிலருக்கு மிகவும் பிடித்தமானவையாக இருக்கலாம். இவற்றை தமிழ்நாட்டில் உள்ள இசை கல்லூரிகளை தமிழ்நாடு அரசின் பண்பாட்டு துறை நடத்துகிறது. இங்கு வழங்கப்படும் படிப்புகளுக்கு டாக்டர் ஜே. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம் பட்டம் வழங்குகிறது.

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்