வரவேற்கிறோம்

நுகர்வோர் பூங்கா என்பது பொதுவான செய்திகள், கட்டுரைகள் மற்றும் பகுப்பாய்வு/விசாரணையுடன் கூடிய செய்தி தளம்/சமூக ஊடகமாகும். நுகர்வோர் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கான பிரத்யேக கட்டுரைகள் மற்றும் மக்களிடையே சட்ட விழிப்புணர்வுக்கான கட்டுரைகளையும் நாங்கள் வழங்குகிறோம். ” உள்ளபடி சொல்வோம் ஆய்வும் செய்வோம்” என்பது இந்த சமூக ஊடகத்தின் கொள்கை.

எழுத்தாளராக நீங்களும் பங்களிக்கலாம்

பொதுவான – நுகர்வோர் பாதுகாப்புக்கு உபயோகமான – சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும்   வகையிலான கட்டுரைகளும் உணவு, மருத்துவம், கல்வி, தொழில், விவசாயம், வர்த்தகம், அறிவியல், ஆன்மீகம், சுற்றுலா, வேலை வாய்ப்பு,   தொடர்பான கட்டுரைகளும்  குழந்தைகள், பெண்கள், மாணவர்கள் உள்ளிட்டவர்களுக்கான சிறப்பு கட்டுரைகளும் வரவேற்கப்படுகின்றன. தங்கள் படைப்புகளை புகைப்படத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

ஆசிரியர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் இந்த இணையதளத்தில் வெளியிடப்படும்.  தேர்வு செய்யப்படாத கட்டுரைகளை   திருப்பி அனுப்ப இயலாது. தேர்வு செய்யப்படும் கட்டுரைகளுக்கு எவ்வித சன்மானமும் வழங்கப்படாது. கட்டுரையாளரின் பெயரும் புகைப்படமும் கட்டுரையுடன் வெளியிடப்பட்டு   சான்றிதழ் வழங்கப்படும்.

ஆய்வாளராக நீங்களும் பங்களிக்கலாம்

பொதுவான – நுகர்வோர் பாதுகாப்புக்கு உபயோகமான – சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும்   வகையிலான ஆய்வுகளையும் உணவு, மருத்துவம், கல்வி, தொழில், விவசாயம், வர்த்தகம், அறிவியல் உள்ளிட்ட ஆய்வுகளையும்  மேற்கொண்டு அவற்றை மக்களுக்கு வழங்க “நுகர்வோர் பூங்கா” திட்டமிட்டுள்ளது.    இப்பணியில் தன்னார்வ ஆய்வாளராக செயல்பட   விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் போது ஆர்வமுள்ள ஆய்வாளர்கள் எங்களோடு இணைந்து பணியாற்றலாம். விண்ணப்பம் கோரப்படாத போது சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் தேவைப்பட்டால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.  ஆய்வாளர் குழுவில் இணைந்து பணியாற்றுபவர்களுக்கு தக்க சான்றிதழ் வழங்கப்படும்.

விரிவாக்க அலுவலராக நீங்களும் பங்களிக்கலாம்

“நுகர்வோர் பூங்கா” சமூக ஊடக  கட்டுரைகள் மூலம் மக்கள் பயன்பெற இந்த சமூக ஊடகத்தை விரிவாக்கம் செய்யும் பணியில்   தன்னார்வ விரிவாக்க அலுவலராக செயல்பட விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் போது ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் எங்களோடு இணைந்து பணியாற்ற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் கோரப்படாத போது சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் தேவைப்பட்டால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். விரிவாக்க அலுவலர் குழுவில் இணைந்து பணியாற்றவர்களுக்கு தக்க சான்றிதழ் வழங்கப்படும்

பயிற்சி திட்டங்கள்

மாணவ-மாணவியருக்கான செய்தியாளர் பயிற்சி திட்டம், சட்ட மாணவ-மாணவியருக்கான சிறப்பு செய்தியாளர் பயிற்சி திட்டம் உள்ளிட்டவற்றை நுகர்வோர் பூங்கா அறிமுகப்படுத்த   உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் போது ஆர்வமுள்ள மாணவ-மாணவிகள் எங்களோடு இணைந்து பணியாற்ற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் கோரப்படாத போது சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் தேவைப்பட்டால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

சமூக விழிப்புணர்வு, சட்ட அறிவுத்திறன், நுகர்வோர் பாதுகாப்பு உள்ளிட்ட தலைப்புகளில் மக்களுக்கு பயிற்சி   பட்டறைகளை நடத்தும் திட்டத்தை நுகர்வோர் பூங்கா அறிமுகப்படுத்த   உள்ளது. பயிற்சி பட்டறைகள் ஏற்பாடு செய்யும் நேரத்தில் இது குறித்த அறிவிப்பு இந்த தளத்தில்   வெளியிடப்படும்

தூதுவர்- புரவலர் திட்டங்கள்

மக்களுக்கு செய்தி மற்றும் விழிப்புணர்வு கட்டுரைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு   செல்வதை வலுப்படுத்தும் வகையில் நல்லெண்ண தூதர்களை  நியமிக்கவும்   நுகர்வோர் பூங்காவின் பணிகளை ஆதரிக்கும் நண்பர்களை புரவலர்களாக நியமிக்கவும் நுகர்வோர் பூங்கா திட்டமிட்டுள்ளது.  இவ்வாறு நியமிக்கப்படும் நல்லெண்ண தூதர்கள் மற்றும் புரவலர்கள் புகைப்படம் இந்தப் பகுதியில் இரண்டு ஆண்டு காலத்திற்கு வெளியிடப்படும். இந்தப் பணியில் அர்ப்பணிக்க  விரும்புவோர் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் எங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது