நுகர்வோர் நீதிமன்றங்கள் நுகர்வோர் உரிமைகள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க வேண்டும்

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள நுகர்வோர் உரிமை மீறல்கள் தொடர்பான விவரங்கள் நுகர்வோர் ஆணையங்களின் கவனத்திற்கு வருமானால் அவற்றை தானாக முன்வந்து விசாரிக்கும் அதிகாரம் நுகர்வோர் ஆணையங்களுக்கும் வழங்கும் வகையில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் மூலம் நுகர்வோர் பாதுகாப்பு வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.