நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில்கள் அமைக்க வேண்டும் என சட்டம் கூறுவது பெயரளவில்தானா?

இதுகுறித்து அரியலூர் மாவட்ட நுகர்வோர்   நீதிமன்றத்தில் டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வில் நடைபெற்ற ஒரு வழக்கில் (நுகர்வோர் பல்வகை மனு எண்: 39/2022- நுகர்வோர் புகார் தாக்கல் வரிசை எண்: 53/2022)  கூறப்பட்டிருப்பதாவது. நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில்களை மத்திய, மாநில அரசுகள்   அமைக்க கால நிர்ணயம் எதுவும் செய்யப்படவில்லை என்றாலும் இவற்றை அமைப்பது மாநில அரசின் கட்டாய பணியாகும்.  இத்தகைய ஆலோசனை அமைப்புகள் மூலம் நுகர்வோர் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என்பதில் ஐயமில்லை. இந்த கவுன்சில்களை அமைக்கவும் உறுப்பினர்களை   நியமனம் செய்யவும் உத்தரவிடும் அதிகாரத்தை நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு வழங்கவில்லை.