தமிழர்கள் உட்பட இந்தியராயினும் நான்கு இந்திய மாநிலங்களுக்குள் செல்ல அனுமதி பெற வேண்டும்.  குறைந்தபட்சம் தமிழகத்தில் நுழையும்   வெளிமாநிலத்தவர்கள் புள்ளி விவரம் பராமரிக்கப்படுமா?

பொது நலனுக்காக உள் நுழைவு சீட்டு முறையை கொண்டு வருவதற்கு அரசியலமைப்பு அனுமதித்துள்ள போதிலும் இத்தகைய முறையை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கான சாத்திய கூறுகள் இல்லை. இருப்பினும் தமிழகத்துக்குள் நுழையும் தமிழகத்தின் அண்டை மாநிலங்கள் அல்லாத மாநிலங்களை (other than neighbouring states) சேர்ந்தவர்களின் புள்ளி விபரங்கள் கூட தமிழ்நாடு அரசால் பராமரிப்பதாக தெரியவில்லை. அண்டை மாநிலங்கள் அல்லாத மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் வரும் இந்தியர்களின் வருகை மற்றும் புறப்பாடு ஆகிய விவரங்களையும் அவ்வாறு வருபவர்கள் எங்கு தங்கியுள்ளார்கள்? என்ன தொழில் புரிகிறார்கள்? என்ற விவரங்களையும் திரட்டி பராமரிப்பது அவசியமானதாகும். இத்தகைய விவரங்கள் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு, குற்றத்தடுப்பு, பயங்கரவாத ஒழிப்பு போன்ற பாதுகாப்பு அம்சங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.