நவகிரக அதிபதிகளில் முதன்மையான சூரியனுக்கு இந்தியாவில் இரண்டு கோவில்கள் – அதில் ஒன்று தமிழகத்தில்!

அரசியல் வாழ்க்கை, அரசு வேலை, தலைமைப்பதவி, தந்தை வழி யோகம் ஆகியவற்றிற்கு காரணமானவர் சூரியன்தான் என்று நம்பப்படுகிறது. உலக இயக்கத்திற்கு காரணமான சூரியனை வழிபடும் முறை செளமாரம் என்றும் சூரியனை வழிபடும் விரதங்களில் முக்கியமானதாக கருதப்படும் ரத சப்தமி என்பது சூரிய ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் ரத சப்தமி உற்சவம் 10 நாட்கள் திருவிழாவாக இங்கு கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று சிவ சூரிய பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் இங்கு நடைபெறுகிறது.