ரெடிமேட் இட்லி – உஷார் மக்களே!

“சார் இட்லி எல்லாம் வெளியில் இருந்து வாங்குகிறது தான் சூடா எல்லாம் இருக்காது” என்றார். அந்த கடையின் பணியாளர். நான் அவரைப் பார்த்து ஆச்சரியத்துடன் “அப்படியா?” என கேட்டபோது அவர் சொன்னார் “இந்த ஊரில் மூன்று இட்லி பேக்டரி உள்ளது. இரண்டு பேக்டரியல் சிம்ரன் இட்லி பேக்டரி. ஒரு பேக்டரி குஷ்பு இட்லி பாக்டரி” .  அது என்ன சிம்ரன் இட்லி? குஷ்பூ இட்லி? என நான் கேட்பதாக பார்த்த பார்வையிலே தெரிந்து கொண்ட அவர் விளக்கினார் “குண்டாக  உள்ள இட்லி குஷ்பு இட்லி. சாதாரணமாக இருக்கக்கூடிய சிம்ரன் இட்லி” என வர்ணித்தார்.