உஷார்! பாட்டில், கேன் தண்ணீர் குடிக்கிறீர்களா? தரமற்ற குடிநீர் கலப்பட உணவு பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவது ஒழிக்கப்பட வேண்டும் – நுகர்வோர் நீதிபதி வலியுறுத்தல்

நாமக்கல்லில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தொடங்கப்பட்ட நவம்பர் 2000 முதல் கடந்த மார்ச் 2023 வரை 1107 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. கடந்த 2023 ஏப்ரல் முதல் தற்போது வரை 21 மாதங்களில் 462 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில் கோயம்புத்தூரில் இருந்து விரைவான விசாரணைக்காக மாற்றலாகி வந்த 128 வழக்குகளில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.