“எங்களிடம் படித்தால் 100% பாஸ்” கோச்சிங் இன்ஸ்டிடியூட் போலி விளம்பர தடுப்பு புதிய விதிகளை அறிந்து கொள்ளுங்கள்!

கல்வி நிலையங்களில் சேருவதற்கும் வேலை வாய்ப்புக்கும் நடத்தப்படும் தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்களும் இளைஞர்களும் கோச்சிங் இன்ஸ்டிடியூட் (Coaching Institute) என்ற பெயரில் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை (misleading advertisement) நம்பி அங்கு பணத்தை செலுத்தி ஏமாறுவது அதிகரித்துள்ளது. இந்நிலையில், தவறாக வழி நடத்தும் விளம்பரங்களை பயிற்சி மையங்கள் வெளியிடுவதை தடுக்கும் விதிகள் (Guidelines for Prevention of Misleading Advertisement in Coaching Sector, 2024) கடந்த 2024 நவம்பர் 13ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.