ஜாமீன் கையொப்பம் செய்தவரிடம் அசல் ஆவணங்களை வழங்கிய வங்கி வாடிக்கையாளருக்கு ரூபாய் 30 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று (25-11-2024) நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. ஜாமீன் கையொப்பம் செய்த  கார்த்தி வங்கியில் சமர்ப்பித்த பதிவு செய்யப்படாத சம்மத பத்திரத்தின் உண்மை தன்மையை அறியாமல் கடன் பெற்ற தமிழரசனை நேரில் வரவழைத்து விசாரிக்காமல் அசல் ஆவணங்களை ஜாமீன் கையொப்பம் செய்தவரிடம் வழங்கியது சேவை குறைபாடு என்று இத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.