ஒரு சொட்டு அசல் பால் இல்லாத செயற்கை பால். தயாரித்து விற்றவர் கைது. இன்னும் எத்தனை பேர் தயாரிக்கிறார்கள்? நமக்கு கிடைக்கும் பாலின் தரம் என்ன?

கலப்பட பாலை (adulterated milk) பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். செயற்கை பாலை (synthetic milk) பற்றி கேள்விப்பட்டிருக்கிறோமா? ஆய்வகத்தில் (லேப்) உற்பத்தி செய்யப்படும் பாலைப் (lab milk) பற்றி கேள்விப்பட்டு உள்ளோமா? தற்போது நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் பால் இயற்கையானதா? தூய்மையானதா? தர விதிகளின்படி பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகிறதா? என்பதை போர்க்கால அடிப்படையில் சோதனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது