நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் கல்லூரி முதல்வர் டாக்டர் டி ஆர் அருண் தலைமையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சைபர் குற்றங்களிலிருந்து பாதுகாப்புக்கான சட்டங்கள் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தை நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராம்ராஜ் தொடங்கி வைத்து பேசியதாவது.
இந்தியாவில் முதலாவது நாடாளுமன்றத் தேர்தல் 1952 ஆம் ஆண்டில் நடைபெற்று முடிந்த நாளை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்க வேண்டும் என்ற எனது கருத்தை கடந்த 1995 ஆம் ஜனவரியில் தமிழகத்தில் பிரபலமான நாளிதழ் (Dinamalar) ஒன்று “சொல்கிறார்கள்” என தலைப்பிட்டு வெளியிட்டது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் நிறுவன நாளைக் குறிக்கும் வகையிலும் வாக்காளர்களை அரசியல் செயல்பாட்டில் பங்கேற்க ஊக்குவிக்கும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 ஆம் தேதியை “தேசிய வாக்காளர் தினமாக” அனுசரிக்க மத்திய அரசு கடந்த 2011 ஆம் ஆண்டு முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாக இந்தியர்களாகிய நாம் அனைவரும் அனுசரித்து வருகிறோம்.
ஒவ்வொரு நாட்டிலும் குடிமக்களின் கைகளில் உள்ள துருப்புச் சீட்டான ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் வாக்குரிமைதான் உச்ச அதிகாரம் (supreme power) படைத்தது. அரசியலும் சட்டமும் இல்லாமல் அணுவும் இயங்க முடியாது. இதில் தேர்தல்களும் ஆட்சி முறையும் ஒரு நாணயத்தின் ஒரு பக்கம் என்றால் வாக்காளர்கள் அந்த நாணயத்தின் மறுபக்கம் ஆவார்கள்.
கல்வியில் பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளதைப் போல வாக்காளரியல் என்ற கல்வி பாடப்பிரிவு தொடங்கப்பட வேண்டும். வாக்காளரியல் (voterology) என்ற வார்த்தை அகராதியில் கூட இல்லாத நிலைமை உள்ளது. இந்த வார்த்தையை முதன்முதலாக 1999 ஆம் ஆண்டு தமிழகத்தில் பிரபலமாக உள்ள நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில் நான் பயன்படுத்த தொடங்கினேன். இந்திய தேர்தல் சட்டங்கள் மற்றும் நடைமுறைகள், பல நாடுகளில் உள்ள தேர்தல் சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து மக்களாட்சி பண்புகளை பாதுகாக்கும் வகையில் தேர்தல் சீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டிய காலகட்டத்தில் தற்போது இருக்கிறோம்.
(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)
தேர்தல் குறித்த வழக்குகள் முடிய பல ஆண்டுகள் காலதாமதமானால் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டவர் பதவிக்காலம் முடிந்த பின்பு தோல்வி அடைந்ததாக கூட தீர்ப்பு வரலாம். தேர்தல் முடிவுகள் குறித்த வழக்குகளை ஆறு மாதங்களுக்குள் முடிப்பதற்கு வசதியாக தேர்தல் தீர்ப்பாயங்களை அமைக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று (இந்தியா டுடேவில்) 2000 மார்ச் மாதத்தில் நான் எழுதினேன். இதன் பிறகு தேர்தல் குறித்த வழக்கு ஆறு மாதங்களுக்குள் முடிக்க தேர்தல் தீர்ப்பாயங்களை அமைக்க வேண்டும் என்று கடந்த 2005 ஆகஸ்ட் மாதத்தில் வெளியான மத்திய அரசின் இரண்டாவது நிர்வாக சீர்திருத்தத்த ஆணையம் பரிந்துரை செய்தது. ஆனால், நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் பரிந்துரை தற்போது வரை சட்டமாக்கப்படவில்லை.
உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை நடத்த விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய வழக்குகளில் ஆறு மாதங்களுக்குள் தீர்வு காண வேண்டியது மிக அவசியமான ஒன்றாகும்.
ஒரு ரூபாய்க்கு பொருளை வாங்கினால் கூட உரிமை மீறப்படும் போது வழக்கமான நீதிமன்றங்கள் அல்லாமல் சிறப்பு அமைப்பான நுகர்வோர் ஆணையங்கள் மூலம் வழக்கு தாக்கல் செய்ய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. பணத்தைவிட விலைமதிப்பற்ற தமது வாக்கை செலுத்தி ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் வாக்காளர்களை தவறாக வழி நடத்தும் விளம்பரங்கள், நியாயமற்ற மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட நடைமுறைகள், இருண்ட வடிவ தாக்குதல்கள், சேவையில் குறைபாடு போன்ற பிரச்சனைகள் ஏற்படும் போது தீர்வு காண அணுகுவதற்கு வழக்கமான நீதிமன்றங்கள் அல்லாமல் சிறப்பு அமைப்புகள் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை.
தேர்தல் வழக்குகளுக்கு ஆறு மாத காலத்தில் தீர்வு காணும் வகையில் மாநில தேர்தல் தீர்ப்பாயங்களையும் மேல்முறையீடுகளை ஆறு மாதங்களில் தீர்க்கும் வகையில் தேசிய தேர்தல் தீர்ப்பாயமும் அமைக்க சட்டம இயற்றப்பட வேண்டும் இதே போலவே வாக்காளர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் மக்களாட்சியின் மீது நடத்த விடும் தாக்குதல்களை விசாரிக்கவும் தேசிய வாக்காளர் உரிமைகள் பாதுகாப்பு கமிஷனும் மாநிலங்களில் மாநில தேசிய வாக்காளர் உரிமைகள் பாதுகாப்பு கமிஷன்களும் அமைக்க உடனடியாக அமைக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும்.
வாக்காளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், வாக்காளர் கல்வி, ஆராய்ச்சி மற்றும் களப்பணியை மேம்படுத்தவும் உலகளாவிய வாக்காளர் இயக்கத்தைத் தொடங்குவது அவசியம். ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச தேர்தல் சட்டத்தை உருவாக்கி ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் கடைபிடிக்க வலியுறுத்தப்பட வேண்டும் என்று நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் பேசினார்.
நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: தேர்தல்கள் முடிவடைந்ததும் அடிமைத்தனம் தொடங்குகிறது என்று அரசியல் அறிவியல் அறிஞர் ஜான் ஆடம்ஸ் பல ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்தார். இந்த நிலை இன்னும் நீடிக்கிறதா? என்பதை பொதுமக்கள் சிந்திக்க வேண்டும்.



“பூங்கா இதழ்” படிக்க இங்கே தொடுங்கள்! (Click here)

பூங்கா இதழ் நுகர்வோர் பூங்கா வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்! இணைய இங்கே தொடவும். Click Here!
எங்களது வெளியீடுகள் (Our Current and Upcoming publication) – இதழ்களின் பெயரை தொட்டால் இதழ்களின் இணையதளத்துக்கு செல்லலாம் (Click the heading of journals, see the concern website) |
வெகுஜன வெளியீடுகள் (Popular Park) |
நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ் |
நுகர்வோர் பூங்கா (ஆங்கிலம்) – இணைய இதழ் |
பூங்கா இதழ் (தமிழ்) – இணைய இதழ் |
தி நியூஸ் பார்க் (ஆங்கிலம்) – இணைய இதழ் |
தி நியூஸ் பார்க் மொபைல் பயன்பாடு (Mobile App) – soon |
ஆராய்ச்சி வெளியீடுகள் (Research Park) |
சட்டம், மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி இதழ் |
சர்வதேச நிறுவனங்கள், அரசியலமைப்பு சட்டம், ஆட்சியியல் ஆராய்ச்சி இதழ் |
குற்றங்கள், விபத்துகள், குற்றவியல் சட்டம், பாதிக்கப்பட்டோரியல் ஆராய்ச்சி இதழ் |
அமைதி உத்திகள் மற்றும் ஆராய்ச்சி இதழ் |
விண்வெளி, கடல், ஆகாயம் ஆராய்ச்சி இதழ் |
வாக்காளரியல் (Voterology) ஆராய்ச்சி இதழ் |