spot_img
March 12, 2025, 9:52 am
spot_img

அற்ப காரணங்களுக்கெல்லாம் இழப்பீட்டு தொகையை வழங்க மறுக்கிறீர்களே? இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்.

பீகார் மாநிலம், அவுரங்காபாத் மாவட்டத்தில் கர்ஹாரா கிராமத்தில் வசிப்பவர் ராம் நாராயண சிங் மகன் ஸ்ரீ பினோத்குமார் சிங்.  இவர்  சொந்தமாக லாரி ஒன்றை (Reg No:  BR 02 Q 9220) வைத்து தொழில் செய்து வருபவர் ஆவார் (truck owner). இந்த வாகனத்திற்கு பிரிமிய தொகை செலுத்தி கடந்த 2013 செப்டம்பர் 18ஆம் தேதி முதல் ஓராண்டுக்கு நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனியில் இன்சூரன்ஸ் (insurance policy) பெற்றுள்ளார். இந்நிலையில் துரதிஷ்டவசமாக கடந்த 2014 ஜூன் மாதம் எட்டாம் தேதி அன்று வாகனத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக லாரி தீப்பற்றி (fire accident) முழுவதுமாக சேதம் அடைந்து விட்டது.

லாரி தீப்பிடித்தது குறித்து உடனடியாக இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கும் காவல் நிலையத்துக்கும் பினோத்குமார் தகவல் கொடுத்துள்ளார். வாகனத்தை சரி செய்ய தோராயமாக ரூ 23,74,142/- செலவு ஏற்படும் என்று இன்சூரன்ஸ் சர்வேயர் (surveyor) மதிப்பீடு செய்துள்ளார். இன்சூரன்ஸ் நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட இரண்டாவது   சர்வேயர்   வாகனத்தை சரி செய்ய செலவு ரூ 13,55,438/- ஏற்படும் என்று அறிக்கை சமர்ப்பித்துள்ளார். இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இழப்புக்கான பணத்தை வழங்குமாறு பினோத்குமார் சிங் விண்ணப்பம் (claim) செய்துள்ளார் ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீட்டுத் தொகையை வழங்கவில்லை. 

(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)  
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  
 
 வாக்காளரியல் என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  

இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீட்டைத் தொகையை வழங்காததால் பீகார் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் (State Consumer Commission) இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மீது இழப்பீட்டு தொகையை வழங்க கோரி பினோத் குமார் வழக்கு (Consumer Complainant No: 44 of 2014)  தாக்கல் செய்தார். வாகனத்தை இயக்குவதற்கு போக்குவரத்து துறையில் முறையான அனுமதியை என்பதால் அவரது கோரிக்கையை இன்சூரன்ஸ் நிறுவனம் ஏற்கவில்லை என்று இன்சூரன்ஸ் நிறுவனம் வாதிட்டது.  இந்த வழக்கில் கடந்த 2017 ஜூலை 7ஆம் தேதி அன்று தீர்ப்பு (order) வழங்கப்பட்டது. இன்சூரன்ஸ் நிறுவனத்தின் வாதம் ஏற்புடையது அல்ல என்றும் இன்சூரன்ஸ் நிறுவனம் தீ விபத்தால் வாகனத்துக்கு ஏற்பட்ட சேதம் காரணமாக இழப்பீட்டை மூன்று மாத காலத்துக்குள் வழங்க வேண்டும் என்றும் இந்த தீர்ப்பில் உத்தரவிடப்பட்டது.

பீகார் மாநில நுகர்வோர் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து இன்சூரன்ஸ் நிறுவனம் தேசிய நுகர்வோர் ஆணையத்தில் மேல்முறையீடு (First Appeal No: 1778 of 2017) செய்தது. மாநில நுகர்வோர் ஆணையம் வழங்கிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை ரத்து செயது கடந்த 2020 ஆகஸ்ட் 19 அன்று தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் (National Consumer Commission) உத்தரவிட்டது. 

இதனைத் தொடர்ந்து பினோத் குமார் உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court) தேசிய நுகர்வோர் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு (SLP -Civil-No: 13060 of 2020) செய்தார். விபத்து நடந்த நாளில் சம்பந்தப்பட்ட வாகனத்திற்கு நேஷனல் பெர்மிட்டுக்கு (national permit) செலுத்த வேண்டிய   ஆதரிசேஷன் (authorization fee) கட்டணம் செலுத்தப்படவில்லை என்றும் விதி மீறப்பட்டுள்ளதால் இழப்பீட்டை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கத் தேவையில்லை என்றும் இன்சூரன்ஸ் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்றம் கடந்த 07 பிப்ரவரி 2025 அன்று தீர்ப்பு வழங்கியது. 

தீ பிடித்து எரிந்த லாரிக்கு நேஷனல் பெர்மிட் போக்குவரத்து துறையால் 13-10-2017 ஆம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது.  சம்பந்தப்பட்ட வாகனம் சென்றால் மட்டுமே ஆதரிசேஷன் கட்டணம் செலுத்தப்பட வேண்டும். பீகாரில் பதிவு  செய்யப்பட்ட ஒரு வாகனத்திற்கு அந்த மாநிலத்தில் இருக்கும்போது விபத்து நேரிட்டால் இழப்பீட்டை வழங்க வேண்டியது இன்சூரன்ஸ் நிறுவனத்தின் கடமை என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் வாகன உரிமையாளருக்கு மாநில நுகர்வோர் ஆணையம் வழங்கிய தீர்ப்புப்படி இழப்பீடு வழங்க வேண்டும் என்று இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், அற்ப காரணங்களுக்கெல்லாம் இழப்பீட்டுத் தொகையை இன்சூரன்ஸ் செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனம் மறுக்கக்கூடாது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: எல்லா நுகர்வோரும் உச்ச நீதிமன்றம் வரை இன்சூரன்ஸ் நிறுவனங்களை எதிர்த்து போராட முடியுமா? நுகர்வோருக்கு உதவ அரசே வழக்கறிஞர்களை நியமனம் செய்யும் வகையில் சட்ட உதவி அமைப்பு இருக்க வேண்டும்.

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்