இன்று காலை நுகர்வோர் இதழ் அலுவலகத்திற்கு நுகர்வோர் சாமி வருகை புரிந்தார். அவருக்கு வணக்கம் செலுத்தி செலுத்தி விட்டு “ஏதேனும் முக்கிய செய்திகள் உண்டா சாமி? என கேட்டதற்கு “நுகர்வு உலகம் எப்போதும் மறைவதில்லை நுகர்வோர் செய்திகள் எப்போதும் இருக்காமல் இருப்பதில்லை” எனக் கூறிவிட்டு செய்திகளை வாசிக்கத் தொடங்கினார் நுகர்வோர் சாமி.
“பிரபல இணையதளம் ஒன்றில் கடந்த ஜனவரி 2 அன்று வெளியிடப்பட்டுள்ள செய்தியில் மருத்துவ காப்பீடு செய்துள்ளவர்களுக்கு 50 சதவீத பாலிசிதாரர்களின் கோரிக்கையை காப்பீட்டு நிறுவனங்கள் நிராகரித்திருக்கிறது அல்லது பகுதி அளவு மட்டுமே அங்கீகரித்து இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை அமைப்பு (IRDA) கடந்த டிசம்பரில் வெளியிட்ட தகவலின்படி, 2024 மார்ச் மாத நிலவரப்படி மருத்துவ இன்சூரன்ஸ் பணத்தை கேட்பவர்களுக்கு நிராகரிப்பு விகிதம் 11 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் ஆறு சதவீத கோரிக்கைகள் நிலுவையில் உள்ளது என்றும் கடந்த நிதியாண்டில் ரூ 26,000 கோடிக்கான மருத்துவ இன்சூரன்ஸ் கேட்பு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்றும் இந்தத் தொகையை பார்க்கும் போது கடந்த காலங்களில் நிராகரிக்கப்பட்டதை விட கூடுதலான நிராகரிப்பு மருத்துவ பாலிசிகளில் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. அற்ப காரணங்களுக்கெல்லாம் மருத்துவ பாலிசியை பெற்றுள்ளவர்களின் கோரிக்கைகளை மருத்துவத்திற்கான பண கோரிக்கைகளை நிராகரிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது” என்றார் நுகர்வோர் சாமி.
“உடல்நல பிரச்சனைகள் ஏற்பட்டால் மருத்துவம் பார்க்க பணம் இல்லாத நிலை ஏற்பட கூடாது என்பதற்குதான் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்குகிறோம். இதிலும் இத்தகைய பிரச்சனைகளா? சாமி இதனை ஒழுங்குபடுத்த தகுந்த நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என்று நம்புகிறேன் சாமி” என்றேன் நான்.
“கர்நாடக மாநிலத்தில் பெல்லாரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் செய்த ஐந்து பெண்கள் மருத்துவமனையிலேயே மரணமடைந்துள்ளனர். மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு மருந்து நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட தரம் குறைந்த மருந்துகளை பயன்படுத்தி அதன் காரணமாகவே இத்தகைய இறப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து விரிவான விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கடைகளில் விற்கப்படும் மருந்துகள் தங்களது உடல் நலத்தை காக்கும் என்று நுகர்வோர் அவற்றை வாங்கும் நிலையில் அந்த மருந்துகளே உயிருக்கு எமனாக அமைவது வேதனை அளிப்பதாக உள்ளது. நாடு முழுவதும் தரமான மருந்துகள் நுகர்வோருக்கு கிடைப்பதற்கு தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய அவசியமானது என்றார் வாக்காளர் சாமி.
“உடல்நலம் காக்க மருத்துவமனைக்கு சென்றால் அங்கும் தரம் குறைந்த மற்றும் கலப்பட மருந்துகள் என்பது வேதனையாக உள்ளது சாமி” என்றேன் நான்
“தீபிகா என்பவரும் அவரது கணவரும் பெங்களூரில் நடைபெற உள்ள ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்வதற்காக மங்களூரில் இருந்து பெங்களூருக்கு செல்ல ரெட் பஸ் செயலி மூலமாக பேருந்து முன்பதிவு செய்துள்ளனர். பேருந்தில் ஏறியதும் பேருந்து சுகாதாரமற்ற நிலையில் இருப்பதை தீபிகா கவனித்துள்ளார். இதனை பேருந்து தெரிவித்தும் ஊழியரிடம் தெரிவித்தும் அவர் சரியான பதிலை தெரிவிக்கவில்லை. பேருந்தில் இவர்கள் இருவரும் பயணிக்கும் போது பூச்சி கடித்து காலையில் பெங்களூரில் இறங்கும் போது தோளில் திட்டு திட்டாக வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இவர்கள் பெங்களூரில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொள்ள இயலவில்லை. இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் தட்சிண கன்னடா மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ரெட்பஸ் செயலி மற்றும் பேருந்து நிர்வாகத்தின் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் விசாரணைக்கு பின்னர் சில தினங்களுக்கு முன்பு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில் பாதிக்கப்பட்ட நுகர்வோர் இருவருக்கும் ரெட் பஸ் செயலி நிர்வாகமும் பேருந்து நிர்வாகமும் ரூபாய் ஒரு லட்சத்து 29 ஆயிரம் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளது” என கூறிவிட்டு விடைபெற்றார் வாக்காளர் சாமி.
நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: அமல்படுத்தப்படும் மருத்துவ இன்சூரன்ஸ் பாலிசிகளை பெரும்பாலான மக்கள் பணம் கொடுத்து வாங்குகிறார்கள். அற்ப காரணங்களுக்கெல்லாம் மருத்துவம் பார்த்ததற்கு உரிய பணத்தை மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க மறுக்கும் நிலையை அகற்ற வேண்டும். இதைப் போலவே உடல் நலத்தை காக்கும் மருந்துகளில் கலப்படம் மற்றும் தரம் குறைவு என்ற நிலை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.
பூங்கா இதழ் நுகர்வோர் பூங்கா வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்! இணைய இங்கே தொடவும். Click Here!
கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்! | |
வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, துவரம் பருப்பு போன்றவற்றின் விலை திடீரென பல மடங்கு உயர்வது ஏன் தெரியுமா? இன்னும் மூன்று மாதத்தில் துவரம் பருப்பின் விலை மூன்று மடங்காகி விடுமா? | |
ஜாமீன் கையொப்பம் செய்தவரிடம் அசல் ஆவணங்களை வழங்கிய வங்கி வாடிக்கையாளருக்கு ரூபாய் 30 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு | |
வாக்காளரியல் என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! | |
எங்களது வெளியீடுகள் (Our Current and Upcoming publication). இதழ்களின் பெயரை தொட்டால் இதழ்களின் இணையதளத்துக்கு செல்லலாம் (Click the heading of journals, see the concern website) | |
வெகுஜன வெளியீடுகள் (Popular Park) | |
நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ் | |
நுகர்வோர் பூங்கா (ஆங்கிலம்) – இணைய இதழ் | |
பூங்கா இதழ் (தமிழ்) – இணைய இதழ் | |
தி நியூஸ் பார்க் (ஆங்கிலம்) – இணைய இதழ் | |
தி நியூஸ் பார்க் மொபைல் பயன்பாடு (Mobile App) – soon | |
ஆராய்ச்சி வெளியீடுகள் (Research Park) | |
சட்டம், மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி இதழ் | |
சர்வதேச நிறுவனங்கள், அரசியலமைப்பு சட்டம், ஆட்சியியல் ஆராய்ச்சி இதழ் | |
குற்றங்கள், விபத்துகள், குற்றவியல் சட்டம், பாதிக்கப்பட்டோரியல் ஆராய்ச்சி இதழ் | |
அமைதி உத்திகள் மற்றும் ஆராய்ச்சி இதழ் | |
விண்வெளி, கடல், ஆகாயம் ஆராய்ச்சி இதழ் | |
வாக்காளரியல் (Voterology) ஆராய்ச்சி இதழ் | |
நுகர்வோர் பூங்கா படைப்புகளின் வகைகள் (Menu and Categories) – மெனுவுக்கு சென்று தலைப்புகளை தொட்டால் அந்தப் பகுதிகளுக்கு செல்லலாம் | |
நாட்டு நடப்பு | பிரச்சனை |
தமிழகம் | சேவை குறைபாடு |
தேசம் | நியாயமற்ற வர்த்தகம் |
சர்வதேசம் | குறைபாடான பொருட்கள் |
சிறப்பு படைப்புகள் | கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தகம் |
கருத்துரை | நியாயமற்ற ஒப்பந்தம் |
நேர்காணல் | அதிக விலை |
அறிவு பூங்கா | இருண்ட மாதிரி |
தவறான விளம்பரம் | |
பொது | |
சட்டம் | தீர்ப்புகள் |
நுகர்வோர் பாதுகாப்பு | வீட்டு உபயோகம் |
உணவு பாதுகாப்பு | உணவு |
அத்தியாவசிய பொருட்கள் | வீட்டு வசதி |
தரநிலைகள் | மருத்துவம்- மருந்துகள் |
மருத்துவ-மருந்து கட்டுப்பாடு | வங்கி/நிதி |
வங்கி-நிதி | காப்பீடு |
காப்பீடு | போக்குவரத்து |
சட்ட அளவியல் | அரசு |
பொது | பொது |
ஆய்வுகள் | நாங்கள் |
சந்தை ஆய்வு | எங்களைப் பற்றி |
புலனாய்வு | புரவலர்கள் |
திறனாய்வு | ஆதரிங்கள் |
சவால்கள் | பங்களியுங்கள் |
ஒப்பீடு | “பூங்கா இதழ்” படியுங்கள்! இணைப்புக்குச் செல்ல இங்கே தொடுங்கள்! (Click here) |
ஆராய்ச்சி பூங்கா | |
கதம்பம் |