spot_img
September 19, 2024, 6:54 am
spot_img

இறந்தவரின் குடும்பத்திற்கு ரூபாய் 16 லட்சம் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள நாகராஜபுரத்தில் வசித்து வந்தவர் தியாகராஜன். இவர் சொந்தமாக லாரி வாங்கி அதனை ஓட்டி வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். அந்த லாரியை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ரூ 52,500/- பிரிமியம் செலுத்தி கடந்த 2022 மார்ச் மாதம் முதல் ஓராண்டுக்கு இன்சூரன்ஸ் செய்திருந்தார். இத்துடன் பர்சனல் ஆக்சிடென்ட் கவரேஜ்க்காக ரூ 275/- இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் செலுத்தியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 19 நவம்பர் 2022   அன்று கர்நாடக மாநிலத்தில் உள்ள மைலார் சர்க்கரை ஆலையில் லாரியில் ஏற்றி வந்த கரும்புகள் கீழே விழாமல் இருப்பதற்காக கேபினில் இருந்த மாற்று டயரில் கயிற்றை கட்டும்பொழுது கயிறு அறுந்து விட்டதால் தியாகராஜன் எதிர்பாராத விதமாக லாரியின் கேபினில் இருந்து லாரியின் முன்பகுதியில் விழுந்து சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். 

தியாகராஜன் லாரியில் வேலை செய்யும்போது ஏற்பட்ட விபத்தில் இறந்துவிட்டார் என்பது குறித்து இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு  தியாகராஜன் மனைவி செல்வராணி தகவல் வழங்கி, காப்பீட்டுத் தொகை ரூபாய் 15 லட்சத்தை  குடும்பத்தினருக்கு வழங்குமாறு கோரிக்கை படிவத்தை தாக்கல் செய்துள்ளார். லாரியில் இருந்த கரும்பு சரக்கை   கயிற்றால் இறுக்கி கட்டுவதற்காக நடவடிக்கை மேற்கொண்ட போது தியாகராஜன் இறந்துள்ளார் என்பதால் தங்களது பாலிசி விதிமுறைகளின்படி இறந்தவருக்கு எவ்வித காப்பீட்டுத் தொகையையும் இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படாது வழங்கப்படாது என்று இன்சூரன்ஸ் நிறுவனம் இறந்தவரின் குடும்பத்திற்கு தெரிவித்து விட்டது.

இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பதிலால் அதிர்ச்சி அடைந்த இறந்த தியாகராஜனின் மனைவியும் அவரது குடும்பத்தாரும் கடந்த 2023 டிசம்பர் மாதத்தில் இன்சூரன்ஸ் நிறுவனம் மீது நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். விபத்தானது வாகனத்தை ஓட்டும்போது/ஏற்றும்போது/இறங்கும் போது அல்லது வாகனத்தில் பயணிக்கும் போது, ​​ வாகனத்துடன் நேரடி தொடர்பில் உரிமையாளர்- ஓட்டுநர் இருந்து அவருக்கு வன்முறை, தற்செயலான மற்றும் புலப்படும் வழிகளால் ஏற்படும் உடல் காயம்/ இறப்புக்கு காப்பீடு செய்துள்ளவருக்கு அல்லது அவரது காப்பீடு செய்துள்ளவர் இறந்து விட்டால் அவரது வாரிசுகளுக்கு   காப்பீட்டு நிறுவனத்தால் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்பது காப்பீட்டு பாலிசியின் விதிமுறை என்பதால் நடைபெற்ற விபத்துக்கு தாங்கள் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டியது இல்லை என்று இன்சூரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் வாதிட்டது

இந்த வழக்கை விசாரித்து, கடந்த 03 செப்டம்பர் 2024 அன்று தீர்ப்பளித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு இறந்தவரின் குடும்பத்துக்கு காப்பீட்டுத் தொகையை வழங்க மறுத்தது இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாடு என்று தெரிவித்துள்ளது.

இறந்த தியாகராஜன் காப்பீடு வழங்கப்பட்ட வாகனத்தில் விபத்து நடந்த போது   இருந்துள்ளார். அந்த வாகனத்தில் இருந்த கரும்புகள் கீழே விழாமல் இருக்க கயிற்றால் இறுக்கி கட்டி விட்டு வாகனத்தில் இருந்து கீழே இறங்க திட்டமிட்டுள்ளார். வாகனத்தை விட்டு இறங்கும் போது பாதுகாப்புக்கான செயலை செய்து விட்டு கீழே இறங்க திட்டமிட்டு இருந்த போது லாரியின் மேல் பகுதியில் இருந்து தவறி கீழே இருந்து விழுந்துள்ளார். இதனால் பாலிசி விதிமுறைகளை மேலோட்டமாக பார்க்காமல்   ஆய்வு செய்யும் போது இன்சூரன்ஸ் நிறுவனம் இறந்தவரின் குடும்பத்திற்கு காப்பீட்டுத் தொகையை வழங்க கடமைப்பட்டுள்ளது என்றும் இவ்வாறு விபத்து நடக்கும் போது காப்பீடு நிறுவனம் இழப்பீட்டை வழங்கும் என்ற சட்டபூர்வமான எதிர்பார்ப்பில்தான் நுகர்வோர் இன்சூரன்ஸ் செய்கிறார்கள் (legitimate expectation) என்றும் தீர்ப்பின் கூறப்பட்டுள்ளது.

பர்சனல் ஆக்சிடென்ட் கவரேஜ் பாலிசியின்படி இன்சூரன்ஸ் நிறுவனம் இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூபாய் 15 இலட்சமும்   சேவை குறைபாட்டால் வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடாக ரூபாய் ஒரு இலட்சமும் நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது

சாஜ். ம
சாஜ். ம
சாஜ். ம, வழக்கறிஞர்/ சட்டக் கல்லூரி விரிவுரையாளர்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்