இந்திய அரசியலமைப்பு அமலுக்கு வந்த தினமான ஜனவரி 26 ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினமாக கொண்டாடுகிறோம். அந்த நாளில் இந்திய அரசியலமைப்பின் பெருமைகளை அனைவருக்கும் எடுத்துரைக்கிறோம். இந்திய அரசியலமைப்பை பாதுகாக்க உறுதிமொழிகளை மேற்கொள்கிறோம். இதைப் போலவே சுதந்திர தினம், தியாகிகள் தினம் போன்ற பல தினங்களை நாம் கொண்டாடுகிறோம். இத்தகைய நாட்களில் சம்பந்தப்பட்ட பொருள் குறித்து பேசுகிறோம். மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை வலியுறுத்துகிறோம்.
கடந்த 2019 ஆம் ஆண்டில் புதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்துக்கு ஒப்புதல் தெரிவித்து இந்தியாவின் குடியரசு தலைவர் கையொப்பம் செய்த தினமான டிசம்பர் 24 ஆம் தேதி தேசிய நுகர்வோர் தினமாக மத்திய அரசு அறிவித்தது. உலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் இறக்கும் வரையில் நுகர்வோராகவே இருக்கிறோம். பொருளாதார வளர்ச்சிக்கு உற்பத்தி மற்றும் சேவை துறைகளின் வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ அதற்கு இணையானதாக நுகர்வோர் பாதுகாப்பு இருக்க வேண்டும்.
அனைத்து தரப்பு மக்களுக்கும் நுகர்வோர் பாதுகாப்பு கிடைக்க வேண்டும் இதற்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வும் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்புடைய உணவு பாதுகாப்பு மருந்து கட்டுப்பாடு மருத்துவ சேவைகள் உட்பட பல சட்டங்களின் விழிப்புணர்வும் இருக்க வேண்டும்.
செய்தி மற்றும் தகவல் கட்டுரைகளுக்கும் அறிவை மேம்படுத்த உதவும் படைப்புகளுக்கும் “பூங்கா இதழ்” படியுங்கள்! இணைப்புக்குச் செல்ல இங்கே தொடுங்கள்! (Click here) |
நூறு நுகர்வோர்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது என்றால் ஐந்துக்கும் குறைவான நுகர்வோர் மட்டுமே நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகி தீர்வு பெற முயற்சிக்கிறார்கள் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு, நுகர்வோர் விழிப்புணர்வு இல்லாதது மட்டுமல்லாமல் சட்ட உதவியை பெறுவதிலும் நுகர்வோருக்கு எளிதான அணுகல் இல்லாமல் இருப்பது காரணமாகும்.
நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் நுகர்வோர் பாதிப்புக்குள்ளாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் பாதிப்புக்கு உள்ளாகும் நுகர்வோருக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்குவதும் மத்திய, மாநில அரசுகளில் உள்ள நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கடமையாகும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம் மாநில அரசின் சார்பில் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலராக மாவட்ட உணவு பொருள் வழங்கல் அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதிகப்படியான விலையை வசூலித்தல், நியாயமற்ற வர்த்தகத்தை புரிதல், உற்பத்தி குறைபாடான பொருட்களை விற்பனை செய்தல், சந்தையில் பொருட்களின் இருப்பை செயற்கையாக பற்றாக்குறையை உருவாக்குதல், நியாயமற்ற ஒப்பந்தம், சேவை குறைபாடு போன்ற நுகர்வோர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகங்கள் காவலனாக செயல்பட வேண்டும்.
தேசிய நுகர்வோர் தினம் வரும் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட உள்ள தேசிய நுகர்வோர் தினத்தன்று எத்தகைய நிகழ்வுகளை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகங்கள் ஏற்பாடு செய்துள்ளன? என்று தெரியவில்லை. தேசிய நுகர்வோர் தினத்தில் கிராமங்களிலும் நகரங்களிலும் பெருநகரங்களில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்த பிரசுரத்தை வெளியிட்டு கிராம நிர்வாக அலுவலர்கள், நியாய விலைக் கடை விற்பனையாளர்கள், ஆசிரியர்கள் மூலமாக சென்றடைய செய்யலாம்.
கட்டுரைகளை வரவேற்கிறோம் ** சமூக விழிப்புணர்வு மற்றும் அறிவு மேம்பாட்டுக்கான கட்டுரைகளை தாங்களும் “நுகர்வோர் பூங்கா இணைய இதழுக்கு” [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். ** வெளியிட தகுந்தனவாக தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் “நுகர்வோர் பூங்கா” இணைய இதழில் வெளியிடப்படும். கட்டுரைகளுடன் தங்களது பெயர், தொடர்பு எண் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை மின்னஞ்சலில் இணைத்து அனுப்பவும். ** தாங்கள் அனுப்பும் கட்டுரைகள் 500 வார்த்தைகளுக்கு மிகாமலும் 300 வார்த்தைகளுக்கு குறையாமலும் இருக்க வேண்டும் எம் எஸ் வேர்ட் (MS word) வடிவத்தில் மின்னஞ்சலுடன் இணைத்து அனுப்ப வேண்டும் கட்டுரைகளை சுருக்கவும், திருத்தவும், நிராகரிக்கவும் ஆசிரியர் குழுவுக்கு உரிமை உண்டு. |
தமிழகத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் மாவட்ட ஊராட்சி அலுவலகங்களிலும் பேரூராட்சி அலுவலகங்களிலும் நகராட்சி அலுவலகங்களிலும் மாநகராட்சி அலுவலகங்களிலும் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த தகவல் பலகையை சம்பந்தப்பட்ட அலுவலகத்தை முன்பு நிறுவினால் பொதுமக்களுக்கு மிகுந்த பயனளிக்கக் கூடியதாக இருக்கும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகமும் உள்ளாட்சி அமைப்பின் நிர்வாகமும் நுகர்வோர் தினத்தன்று நுகர்வோர் தின கருத்தரங்கு, பயிலரங்கு, விழிப்புணர்வு கண்காட்சி, விழிப்புணர்வு ஊர்வலம் போன்றவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் நுகர்வோர் தொடர்புடைய உணவு பாதுகாப்பு அலுவலர், மருந்து கட்டுப்பாட்டு அலுவலர், வட்டார போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட பல துறையினரும் நுகர்வோர் தினத்தன்று நுகர்வோர் தினத்தை அனுசரிக்கவும் கொண்டாடவும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமாக உள்ளது.
நுகர்வோர் தினத்தில் நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்! நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்வோம்!
நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பில் உள்ள ஒவ்வொரு அரசு துறைகளும் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வை தேசிய நுகர்வோர் தினத்தன்று ஏற்படுத்த முன்வர வேண்டும்.
வெகுஜன வெளியீடுகள் (Popular Park)
நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ் நுகர்வோர் பூங்கா (ஆங்கிலம்) – இணைய இதழ் பூங்கா இதழ் (தமிழ்) – இணைய இதழ் தி நியூஸ் பார்க் (ஆங்கிலம்) – இணைய இதழ் தி நியூஸ் பார்க் மொபைல் பயன்பாடு (Mobile App) – soon |
ஆராய்ச்சி வெளியீடுகள் (Research Park)