மகாராஷ்டிரா மாநிலம் புனேவுக்கு அருகில் உள்ள லோனாவாலா என்ற நகரில் வசித்து வந்தவர் பெருலால் பீமாஜி ஓஸ்வால். இவருக்கு கண்ணில் புரை ஏற்பட்டதால் கடந்த 1999 ஜனவரி மாதத்தில் பூனாவில் மதுசூதன் என்.கும்பரே என்ற கண் மருத்துவரை அணுகியுள்ளார். சுஷ்ருத் மருத்துவமனையில் கண் மருத்துவரால் ஓஸ்வாலுக்கு கேட்ராக்ட் அறுவை சிகிச்சை (19.01.1999) செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை நடந்த அன்று இரவே அவர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டார்.
அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கண்ணில் கடுமையான வலி ஏற்பட்டதால் மறுநாளே மருத்துவர் சந்தித்து பிரச்சனையை தெரிவித்துள்ளார். கண்ணை சோதித்து விட்டு வலி நிவாரணி மாத்திரைகளை மருத்துவர் வழங்கியுள்ளார். அவருக்கு கண்ணில் மீண்டும் தொடர்ந்து தாங்க இயலாத அளவுக்கு வலி இருந்ததோடு கண்ணின் பார்வையும் அறுவை சிகிச்சைக்குப் பின்பு முழுமையாக இல்லாமல் போனது. இதனால் அவர் அறுவை சிகிச்சை செய்த மருத்துவரை ஒரு வார காலத்துக்குள் நான்கு முறை சந்தித்து பிரச்சினையை கூறிய போது கண் பார்வை வந்துவிடும் என்றும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார். ஆனால், அவருக்கு கண் பார்வை வரவும் இல்லை. கண்ணில் வலி குறையவும் இல்லை.
பூனாவில் உள்ள தஸ்லிவால் என்ற கண் மருத்துவரை அணுகி ஓஸ்வால் விவரத்தை தெரிவித்துள்ளார். அவரை சித்ரா கரே என்ற மருத்துவரிடம் பரிசோதனைக்கு அந்த மருத்துவர் அனுப்பி வைத்துள்ளார். அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கண் முழுவதும் சேதம் அடைந்துள்ளது என்றும் அதனை கண்ணை உடனடியாக நீக்காவிட்டால் மூளையில் பிரச்சனை ஏற்படும் என்றும் ஓஸ்வாலை சோதனை செய்த மருத்துவர் சித்ரா (27.01.1999) தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த ஓஸ்வால் மற்றும் அவரது குடும்பத்தினர் மீண்டும் ஒரு மருத்துவரின் கருத்தை தெரிந்து கொள்வதற்காக பூனாவில் நிதின் பிரபுதேசாய் என்ற பிரபல கண் மருத்துவரை சந்தித்துள்ளனர். அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள கண்ணில் கடுமையான தொற்று ஏற்பட்டுள்ளதால் கண்ணை முழுமையாக நீக்குவது அவசியமானது என்று அந்த மருத்துவரும் தெரிவித்துள்ளார்.
ஓஸ்வாலும் அவரது குடும்பத்தினரும் பிரச்சனையை தீர்க்க இங்குமங்கும் அலைந்து திரும்பி திரிந்து இறுதியாக பூனாவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளனர். அங்கு ஓசுவாலுக்கு ஏற்பட்ட பிரச்சனையின் தன்மை கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் பாதிக்கப்பட்ட அவரது வலது கண் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத் தோற்றத்தில் கண் இருப்பது போன்ற அமைப்பையும் ராணுவ மருத்துவமனை மருத்துவர்கள் ஏற்படுத்தி உள்ளனர்.
மருத்துவரின் அலட்சியமான அறுவை சிகிச்சையால் ஏற்பட்ட இழப்புக்கு நிவாரணம் கேட்டு ஒஸ்வால் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தவறிழைத்த மருத்துவர் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தால் கடந்த 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. ராணுவ மருத்துவமனையின் மருத்துவர்கள் எவ்வித சாட்சியமும் வழங்கவில்லை என்றும். எந்த ஒரு நிபுணரின் சாட்சியத்தையும் தாக்கல் செய்து மருத்துவர் மீதான புகார் நிரூபிக்கப்படவில்லை என்றும் தீர்ப்பில் கூறி ஓஸ்வால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிரா மாநில நுகர்வோர் ஆணையத்தில் ஓஸ்வால் மேல்முறையீடு (Appeal No. 2337 of 2005) செய்தார். விசாரணையின் போது டாக்டர். பிவாஷ் குமார் தாஸ் என்ற கண் மருத்துவரின் கருத்து உரை மாநில நுகர்வோர் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் கடந்த 2015 நவம்பர் மாதத்தில் மாநில நுகர்வோர் ஆணையம் தீர்ப்பு வழங்கியது.
அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் தாக்கல் செய்துள்ள மருத்துவ ஆவணங்களில் முரண்பாடுகள் உள்ளன என்றும் ராணுவ மருத்துவக் கல்லூரியில் வழங்கப்பட்ட நோயாளியின் விடுவிப்பு ஆவணத்தில் நோயாளிக்கு ஏற்பட்ட பிரச்சனையும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையும் வழக்கை உறுதிப்படுத்துகின்றன என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. அலட்சியமான மருத்துவ சிகிச்சை வழங்கியதற்காக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் வழக்கு தாக்கல் செய்துள்ள ஓஸ்வாலுக்கு ரூ 3,50,000/- ஐ இரண்டு மாதங்களுக்குள் வழங்க மாநில நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.
மாநில நுகர்வோர் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய நுகர்வோர் ஆணையத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவர் மேல்முறையீடு (Revision Petition No. 768 of 2016) செய்தார். போதுமான இழப்பீடு வழங்கப்படவில்லை என்று ஓஸ்வாலும் தேசிய நுகர்வோர் ஆணையத்தில் மேல்முறையீடு (Revision Petition No. 2443 of 2016) செய்தார். இரண்டு மேல்முறையீடுகளையும் விசாரித்த தேசிய நுகர்வோர் ஆணையம் கடந்த 2018 நவம்பர் மாதத்தில் மருத்துவரின் மேல்முறையீட்டை ஏற்று மாநில நுகர்வோர் ஆணையர் தீர்ப்பை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது.
தேசிய நுகர்வோர் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓஸ்வால் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு (SLP (C.) NOS.11716-11717 OF 2019) செய்தார். இதனிடையே ஓஸ்வால் இறந்து விட்டதால் அவரது வாரிசுகள் வழக்கை நடத்தினர். ஆனால், அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் உச்சநீதிமன்றத்தின் அறிவிப்பை பெற்றுக் கொண்டும் ஆஜராகவில்லை. இதனால், உச்சநீதிமன்றம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திலும் மாநில நுகர்வோர் ஆணையத்திலும் தேசிய நுகர்வோர் ஆணையத்திலும் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஓஸ்வால் வழக்கறிஞரின் வாதங்கள் அடிப்படையில் கடந்த 2004 டிசம்பர் மாதத்தில் தீர்ப்பு வழங்கியது.
அறுவை சிகிச்சை செய்த மருத்துவரால் புரியப்பட்ட தவறு வெளிப்படையாக மருத்துவ ஆவணங்களின் மூலம் தெரியும் நிலையில் நிபுணரின் கருத்து தேவையில்லை. மருத்துவர் தரப்பில் மாவட்ட நீதிமன்றத்திலும் மாநில ஆணையத்திலும் தேசிய ஆணையத்திலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மருத்துவ ஆவணங்களில் முரண்பாடுகள் உள்ளன. ராணுவ மருத்துவமனையில் ஓசுவாளுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த ஆவணங்களும் மாநில நுகர்வோர் ஆணையத்தில் கருத்து உரையை வழங்கிய மருத்துவரின் கருத்தும் பாதிக்கப்பட்டவருக்கு சாதகமாக உள்ளது. அறுவை சிகிச்சையும் புரிந்த மருத்துவர் அலட்சியமாக மருத்துவ சேவை வழங்கி உள்ளது வெளிப்படையாக தெரிகிறது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
இறுதியாக, தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட ஓஸ்வால் குடும்பத்தினருக்கு ரூ 3,50,000/- ஐ இரண்டு மாதத்துக்குள் வழங்க அறுவை சிகிச்சை செய்த மருத்துவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: அலட்சியமான மருத்துவ சிகிச்சையால் பாதிக்கப்பட்டவர் நீதியைப் பெற 26 ஆண்டுகால போராட்டம் என்பது வேதனையாக உள்ளது. சாதாரணமாக உள்ள ஒவ்வொருவரும் இத்தகைய சட்டப் போரை நடத்த இயலாது. நுகர்வோர் வழக்குகளில் விரைவான நீதி என்பது உடனடி தேவையாக உள்ளது.
கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்! | |
வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, துவரம் பருப்பு போன்றவற்றின் விலை திடீரென பல மடங்கு உயர்வது ஏன் தெரியுமா? இன்னும் மூன்று மாதத்தில் துவரம் பருப்பின் விலை மூன்று மடங்காகி விடுமா? | |
ஜாமீன் கையொப்பம் செய்தவரிடம் அசல் ஆவணங்களை வழங்கிய வங்கி வாடிக்கையாளருக்கு ரூபாய் 30 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு | |
வாக்காளரியல் என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! | |
எங்களது வெளியீடுகள் (Our Current and Upcoming publication). இதழ்களின் பெயரை தொட்டால் இதழ்களின் இணையதளத்துக்கு செல்லலாம் (Click the heading of journals, see the concern website) | |
வெகுஜன வெளியீடுகள் (Popular Park) | |
நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ் | |
நுகர்வோர் பூங்கா (ஆங்கிலம்) – இணைய இதழ் | |
பூங்கா இதழ் (தமிழ்) – இணைய இதழ் | |
தி நியூஸ் பார்க் (ஆங்கிலம்) – இணைய இதழ் | |
தி நியூஸ் பார்க் மொபைல் பயன்பாடு (Mobile App) – soon | |
ஆராய்ச்சி வெளியீடுகள் (Research Park) | |
சட்டம், மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி இதழ் | |
சர்வதேச நிறுவனங்கள், அரசியலமைப்பு சட்டம், ஆட்சியியல் ஆராய்ச்சி இதழ் | |
குற்றங்கள், விபத்துகள், குற்றவியல் சட்டம், பாதிக்கப்பட்டோரியல் ஆராய்ச்சி இதழ் | |
அமைதி உத்திகள் மற்றும் ஆராய்ச்சி இதழ் | |
விண்வெளி, கடல், ஆகாயம் ஆராய்ச்சி இதழ் | |
வாக்காளரியல் (Voterology) ஆராய்ச்சி இதழ் | |
நுகர்வோர் பூங்கா படைப்புகளின் வகைகள் (Menu and Categories) – மெனுவுக்கு சென்று தலைப்புகளை தொட்டால் அந்தப் பகுதிகளுக்கு செல்லலாம் | |
நாட்டு நடப்பு | பிரச்சனை |
தமிழகம் | சேவை குறைபாடு |
தேசம் | நியாயமற்ற வர்த்தகம் |
சர்வதேசம் | குறைபாடான பொருட்கள் |
சிறப்பு படைப்புகள் | கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தகம் |
கருத்துரை | நியாயமற்ற ஒப்பந்தம் |
நேர்காணல் | அதிக விலை |
அறிவு பூங்கா | இருண்ட மாதிரி |
தவறான விளம்பரம் | |
பொது | |
சட்டம் | தீர்ப்புகள் |
நுகர்வோர் பாதுகாப்பு | வீட்டு உபயோகம் |
உணவு பாதுகாப்பு | உணவு |
அத்தியாவசிய பொருட்கள் | வீட்டு வசதி |
தரநிலைகள் | மருத்துவம்- மருந்துகள் |
மருத்துவ-மருந்து கட்டுப்பாடு | வங்கி/நிதி |
வங்கி-நிதி | காப்பீடு |
காப்பீடு | போக்குவரத்து |
சட்ட அளவியல் | அரசு |
பொது | பொது |
ஆய்வுகள் | நாங்கள் |
சந்தை ஆய்வு | எங்களைப் பற்றி |
புலனாய்வு | புரவலர்கள் |
திறனாய்வு | ஆதரிங்கள் |
சவால்கள் | பங்களியுங்கள் |
ஒப்பீடு | “பூங்கா இதழ்” படியுங்கள்! இணைப்புக்குச் செல்ல இங்கே தொடுங்கள்! (Click here) |
ஆராய்ச்சி பூங்கா | |
கதம்பம் |