இயற்கையான மரணத்தை தற்கொலை என வாதிட்ட இன்சூரன்ஸ் ரூ  52 லட்சம் வழங்க நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு  

காவல்துறையினர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்து இறந்து போனவரின் மரணம் இயற்கையானது என்று தெரிவித்துள்ளது. தடயவியல் அறிக்கையில்  இறந்து போனவரின் வயிற்றில் இருந்த உணவுப் பொருட்களில் விஷம் அல்லது ரசாயனம் கலந்த எதுவும் இல்லை என தெரிவித்துள்ளது. அரசு மருத்துவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு இறப்பிற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இறந்து போனவர் இயற்கையாகவே இருந்துள்ளார் என கருத வேண்டிய நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக இன்சூரன்ஸ் நிறுவனம் வாதிடுவது ஏற்புடையதல்ல என்று நாமக்கல்  மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.