spot_img
November 21, 2024, 2:10 pm
spot_img

மின்சாரம், பெட்ரோல், டோல்கேட், இன்சூரன்ஸ் பிரிமியம், தொலைபேசி உள்ளிட்ட கட்டணங்களை உயர்த்துவது அரசா? ஆணையமா?

சமீபத்தில் தமிழகத்தில் மின் உபயோகத்துக்கும் மின்சார வாரியத்தின் சேவைகளுக்குமான கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. செய்திகளில் பார்க்கும்போது இவ்வாறான கட்டண உயர்வை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (Tamil Nadu Electricity Regulatory Commission) அனுமதித்துள்ளது என்பதை பார்க்க முடிகிறது. அரசுதானே கட்டண உயர்வை அமல்படுத்துகிறது. இதற்கிடையில் இந்த ஆணையத்திற்கு என்ன அதிகாரம்? என்பது குறித்து நுகர்வோர்களில் பலர் யோசிப்பதில்லை. மின்சார கட்டண உயர்வை அனுமதிப்பது ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்படும் மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆகும். இதில் ஒரு தலைவரும் உறுப்பினர்களும் உள்ளார்கள். சமீபத்தில் தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது (இறுதி நாள் 30 ஆகஸ்ட் 2024).

மின் கட்டணங்கள் குறித்த முடிவை மேற்கொள்ள மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் இருப்பதைப் போல பெட்ரோல் விலை உயர்வை நிர்ணயம் செய்ய பெட்ரோலிய ஒழுங்குமுறை ஆணையமும் (Petroleum Regulatory Board) இன்சூரன்ஸ் ப்ரீமியம் எவ்வளவு என்பதை அனுமதிக்க இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை அதிகார அமைப்பும் (Insurance Regulatory Development Authority) டோல்கேட்டுகளின் தேசிய நெடுஞ்சாலைகளின் டோல்கேட்டுகளில் சுங்க கட்டணத்தை நிர்ணயிக்கவும் உயர்த்தவும் தேசிய நெடுஞ்சாலைகள் அதிகார அமைப்பும் (National Highways Authority of India)) தொலைபேசி கட்டணங்களை நிர்ணயிக்கவும் அதிகரிக்கவும் அனுமதி வழங்கும் தொலைவு தொடர்பு ஒழுங்குமுறை அதிகார அமைப்பும் (Telecom Regulatory Authority of India) அமைக்கப்பட்டுள்ளன.

மின்சாரம், பெட்ரோல், டோல்கேட், இன்சூரன்ஸ் பிரிமியம், தொலைபேசி கட்டணங்கள் உயர்த்தப்படும் போது மத்திய, மாநில அரசுகளுக்கு கட்டண உயர்வில் எவ்வித பங்கும் இல்லை. இவை சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை ஆணையங்களின் அனுமதியோடு உயர்த்தப்படுகின்றன என்றும் ஒழுங்குமுறை ஆணையங்கள் தன்னிச்சையான அமைப்புகள் என்றும் கட்டண உயர்வை நியாயப்படுத்துவோர் தெரிவிக்கின்றனர்.  

மக்களாட்சி அரசில் அத்தியாவாசிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலை நிர்ணயம் என்பது அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது மிகவும் முக்கியமானதாகும். அரசு தமது கடமைகளை விலக்கிக் கொண்டு அத்தியாவாசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை நிர்ணயம் செய்ய மாற்று அமைப்பிடம் அரசின் கட்டுப்பாடு இல்லாமல் ஒப்படைப்பது சரியானது அல்ல என்று நுகர்வோர் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

நா.சின்னச்சாமி
நா.சின்னச்சாமி
நா.சின்னச்சாமி, பணி நிறைவுபெற்ற வருவாய்துறை அலுவலர்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்