கிரெடிட் கார்டுகளுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் வட்டி வசூலித்துக் கொள்ளலாம் – உச்ச நீதிமன்றம்.  ஒரே நாடு – ஒரே வட்டி விகிதத்தை அமல்படுத்தலாமே!

ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி, சிட்டி பேங்க், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் ஹாங்காங் மற்றும் ஷாங்காய் பேங்கிங் கார்ப்பரேஷன் (HSBC) ஆகிய வெளிநாட்டு வங்கிகள் தேசிய நுகர்வோர் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தன. இந்த மேல்முறையீட்டு வழக்கில் கடந்த 20 டிசம்பர் 2024 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அனைத்து பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் முக்கிய செய்தியாக வெளியாகி உள்ளது.