மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை ஏதாவது ஒரு வகையில் நுகர்வோராகவே வாழ்கிறார். பொருளாதார வளர்ச்சிக்கு உற்பத்தி துறையும் சேவை துறையும் எவ்வளவு முக்கியமோ அதற்கு இணையான முக்கியம் நுகர்வோர் பாதுகாப்புக்கு இருக்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் நடைபெற்ற தேசிய நுகர்வோர் தின விழாவில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தினார். அப்போது அவர் பேசியதாவது.
நாமக்கல்லில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தொடங்கப்பட்ட நவம்பர் 2000 முதல் கடந்த மார்ச் 2023 வரை 1107 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. கடந்த 2023 ஏப்ரல் முதல் தற்போது வரை 21 மாதங்களில் 462 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில் கோயம்புத்தூரில் இருந்து விரைவான விசாரணைக்காக மாற்றலாகி வந்த 128 வழக்குகளில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2023 மார்ச் மாதத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேல் வழக்குகள் நிலுவையில் இருந்தன. தற்போது வழக்கு தாக்கல் செய்து ஓராண்டுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 7 மட்டுமே. நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 119 மட்டுமே. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி தாக்கல் செய்யப்படும் ஒவ்வொரு வழக்கும் மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். விரைவில் நிலுவையில் உள்ள வழக்குகள் தீர்க்கப்படுவதோடு இனிமேல் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை மூன்று மாதங்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த நிதியாண்டில் சமரச பேச்சுவார்த்தை மூலம் தமிழகத்தில் அதிக வழக்குகளை தீர்த்து வைத்து இழப்பீடுகளை நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் நுகர்வோர்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளது. மக்களிடையே நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமாகவும் நுகர்வோர் வழக்குகளில் விரைவான நீதியை வழங்குவதன் மூலமாகவும் மக்களுக்கு நுகர்வோர் நீதிமன்றம் மீது நம்பிக்கை அதிகரிக்கும். 100 நுகர்வோர் பாதிக்கப்பட்டால் ஐந்து நுகர்வோர்தான் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடுகின்றனர். தற்போது நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் நாமக்கல் மாவட்டத்தில் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடி வழக்கு தாக்கல் செய்யும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
உணவு பாதுகாப்புக்காக செயல்படும் மத்திய அரசின் நிறுவனமான உணவு பாதுகாப்பு தர நிர்ணய உயர் அதிகார அமைப்பு (FSSAI – Food Safety and Standards Authority of India) பாட்டில் கடைகளில் விற்கப்படும் பாட்டில் தண்ணீர் ஆபத்தான உணவு வகை என்று சமீபத்தில் தெரிவித்துள்ளது. தரமற்ற குடிநீர் கலப்பட உணவு பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவது ஒழிக்கப்பட வேண்டும்.
செய்தி மற்றும் தகவல் கட்டுரைகளுக்கும் அறிவை மேம்படுத்த உதவும் படைப்புகளுக்கும் “பூங்கா இதழ்” படியுங்கள்! இணைப்புக்குச் செல்ல இங்கே தொடுங்கள்! (Click here) |
புதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் விரைவில் மாவட்ட நுகர்வோர் கவுன்சில்கள் அமைக்கப்பட வேண்டும். நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நுகர்வோர் பாதிப்புகளை தடுக்கவும் மாவட்ட நுகர்வோர் கவுன்சில் சிறப்பாக செயல்பட வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் மாநில அரசின் ஆணைப்படி மாவட்ட நுகர்வோர் கவுன்சில் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடைபெறும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. விரைவில் நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட நுகர்வோர் கவுன்சில் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் பேசினார்.
நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தேசிய நுகர்வோர் தின விழா மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆணைய உறுப்பினர்கள் ஆர். ரமோலா, என். லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். நாமக்கல் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆர். அய்யாவு, நாமக்கல் சிவில் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.ராஜவேலு உட்பட பலர் இந்நிகழ்வில் பங்கேற்று பேசினார்கள். நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களும் சட்டக் கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் தேசிய நுகர்வோர் தின விழாவில் பங்கேற்றனர்.
நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து:
நுகர்வோர் நீதிமன்றங்களில் இன்சூரன்ஸ், வங்கி போன்ற சேவை துறைகளின் மீது பல வழக்குகள் தாக்கலாகின்றன. ஆனால், மிக அத்தியாவசியமான உணவு விற்பனையில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்த வழக்குகள் நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவது குறைவாகவே உள்ளது. இதற்கு மக்களிடையே உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் நுகர்வோர் நீதிமன்றத்தின் செயல்பாடுகளும் தெரியாமல் இருப்பதே காரணமாகும்.
கட்டுரைகளை வரவேற்கிறோம் ** சமூக விழிப்புணர்வு மற்றும் அறிவு மேம்பாட்டுக்கான கட்டுரைகளை தாங்களும் “நுகர்வோர் பூங்கா இணைய இதழுக்கு” [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். ** வெளியிட தகுந்தனவாக தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் “நுகர்வோர் பூங்கா” இணைய இதழில் வெளியிடப்படும். கட்டுரைகளுடன் தங்களது பெயர், தொடர்பு எண் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை மின்னஞ்சலில் இணைத்து அனுப்பவும். ** தாங்கள் அனுப்பும் கட்டுரைகள் 500 வார்த்தைகளுக்கு மிகாமலும் 300 வார்த்தைகளுக்கு குறையாமலும் இருக்க வேண்டும் எம் எஸ் வேர்ட் (MS word) வடிவத்தில் மின்னஞ்சலுடன் இணைத்து அனுப்ப வேண்டும் கட்டுரைகளை சுருக்கவும், திருத்தவும், நிராகரிக்கவும் ஆசிரியர் குழுவுக்கு உரிமை உண்டு. |
கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!