spot_img
January 9, 2025, 3:45 am
spot_img

வங்கியில் பெற்ற கடனுக்கு தனியார் கம்பெனி சார்பில் மிரட்டுகிறார்கள் என தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் உரிய காலத்தில் கடனை திருப்பி செலுத்த விட்டால் வரா கடனாக வங்கிகள் கணக்கு வைக்கிறார்கள். வங்கிகளின் வராகடன்களை குறிப்பிட்ட பணத்தைப் பெற்றுக் கொண்டு அசட்ஸ் ரீகன்ஸ்ட்ரக்சன் கம்பெனிகளுக்கு கடன் கணக்கை விற்று விடுகின்றனர். இந்த கம்பெனியின் பணியாளர்கள் வங்கியில் கடன் பெற்றவரை பெரும்பாலும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட பணத்தை  அவர்கள் கூறும் கணக்கில் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.  வங்கிக்கு கடன் பெற்றவர் சென்று இது குறித்து கேட்டால் தாங்கள் கடனை விற்று விட்டதாகவும் இதற்கு மேல் தங்களுக்கு எதுவும் தெரியாது என்கிறார்கள். இத்தகைய வழக்கு ஒன்றில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் இன்று (07-01-2025) தீர்ப்பு வழங்கியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள ஆண்டிபாளையத்தில் வசித்து வருபவர் ஆர். மனோகரன் மகன் அணு பிரசாத் (35.) இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, திருச்செங்கோடு கிளையில் கடந்த 2007 நவம்பர் மாதத்தில் ரூ 2,57,000/-  கல்வி கடன் பெற்றுள்ளார். இந்த கடனுக்கு அனு பிரசாத் தந்தை கேரண்டராக இருந்துள்ளார். அனு  பிரசாத் படிப்பை முடித்தவுடன் வேலை கிடைக்காததால் தந்தையுடன் கூலி வேலை செய்து வந்துள்ளார். தந்தையும் மகனும் வங்கியில் பெற்ற கல்வி கடனுக்கு உரிய காலத்தில் தவணை தொகைகளை செலுத்தவில்லை. 

பூங்கா இதழ், நுகர்வோர் பூங்கா இணைய இதழ்களின் படைப்புகளை நேரடியாக தங்கள் அலைபேசியில் பெற வாட்ஸ் அப் குழுவில் இணையுங்கள்! இணைய இங்கே தொடவும் (Click Here!)

கடந்த 2017, மார்ச் மாதத்தில் மனோகரன், அணு பிரசாத் ஆகியோரிடம் இருந்து கடனை வசூலிக்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து உள்ளது. 2017 ஏப்ரல் மாதத்தில் தந்தையும் மகனும் வங்கிக்கு சென்று கடனை ஒரே தவணையில் முடிக்கும் திட்டத்தின் கீழ் பேச்சுவார்த்தை நடத்தி கடனை செலுத்தி விட்டனர். பணம் செலுத்திய அன்று அவர்களுக்கு கடன் நிலுவையில் இல்லை என்ற சான்றிதழை (NOC) வங்கி வழங்கி உள்ளது.

இதன் பின்னரும் வங்கியால் கடனை வசூல் செய்ய தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வங்கி திரும்பப் பெறவில்லை. இதனால் கடந்த 2019 செப்டம்பர் மாதத்தில் அணு பிரசாத்தும் மனோரனும் வங்கிக்கு  ரூ 5,16,885 செலுத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்து அனுப்புிரசாத் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ரிலையன்ஸ் அசட்ஸ் ரீகன்ஸ்ட்ரக்சன் கம்பெனியிலிருந்து பேசுவதாகவும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வாங்கிய கடனுக்கு ரூபாய் 7 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. பணத்தைச் செலுத்துமாறு அணு பிரசாத்தில் மொபைலுக்கும் தொடர்ந்து குறுஞ்செய்திகள் வந்துள்ளன. இவர் நேரில் சென்று வங்கி மேனேஜரை சந்தித்து கடனை செலுத்திய பின்னர் “ஏன் பணத்தைக் கேட்டு தொல்லை செய்கிறார்கள்” என்று கேட்டதற்கு அவர் சரிவர பதில் அளிக்கவில்லை. வங்கி தாக்கல் செய்த வழக்கை திரும்பப் பெறவில்லை என்பதும் கடன் ஒப்பந்தத்தை அசட்ஸ் ரீகன்ஸ்ட்ரக்சன் கம்பெனிக்கு வங்கி விற்று விட்டது என்பதும் அணு பிரசாத்துக்கு தெரிய வந்துள்ளது.

இணைய வெகுஜன பத்திரிகைகளிலும் ஆராய்ச்சி பத்திரிகைகளிலும் பங்களிக்க விருப்பமா? இங்கே தொடுங்கள்! (Click here)

அதிர்ச்சி அடைந்த தந்தையும் மகனும் வங்கியின் மீதும் அசட்ஸ் ரீகன்ஸ்ட்ரக்சன் கம்பெனி   மீதும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். நுகர்வோர் நீதிமன்றத்தில் இருந்து விசாரணைக்கு அழைத்தும் வங்கியும் அசட்ஸ் ரீகன்ஸ்ட்ரக்சன் கம்பெனியும் ஆஜராகவில்லை. வழக்கு தாக்கல் செய்தவர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் மற்றும்   சாட்சியம் ஆகியவற்றின் அடிப்படையில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ், உறுப்பினர்கள் ஆர்.ரமோலா, என் லட்சுமணன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (07-01-2025)  தீர்ப்பளித்துள்ளது.

வங்கியின் சேவை குறைபாட்டால் வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடாக ரூபாய் ஐந்து லட்சத்தை நான்கு வார காலத்திற்குள் வங்கி வழங்க வேண்டும். கடன் நிலுவையில் இல்லை என்று சான்று வழங்கிவிட்டு கடனை வசூலிக்க ரீகன்ஸ்ட்ரக்சன் கம்பெனிக்கு அதிகாரம் அளித்தது தவறு என்று வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு நான்கு வாரங்களுக்குள் வங்கி கடிதம் வழங்க வேண்டும். தவறினால் கூடுதல் இழப்பீடாக ஒவ்வொரு நாளும் ரூ 5,000/- வழக்கு தாக்கல் செய்துள்ளவர்களுக்கு வங்கி செலுத்த வேண்டும். இந்தக் கல்விக் கடன் கணக்கு தொடர்பான   வசூல் நடவடிக்கைகள் எதனையும் வழக்கு தாக்கல் செய்து உள்ளவர்கள் மீது ரீகன்ஸ்ட்ரக்சன் கம்பெனி மேற்கொள்ளக்கூடாது என்றும் இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து:

வங்கிகளின் வராக்கடன்களை வங்கிகளிடமிருந்து விலைக்கு வாங்கி செயல்படும் நிதி நிறுவனங்களுக்கு அசட்ஸ் ரீகன்ஸ்ட்ரக்சன்  கம்பெனி என்று பெயர் இவை ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்றவை என்பதோடு செபி சட்டத்தின் கீழ் முறைப்படுத்தப்பட்டவை ஆகும் ஆனால் வராகடன்களை விற்பனை செய்யும் போது சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு யாரிடம் விற்பனை செய்யப்பட்டது என்ற தகவல் கூட வழங்குவதில்லை.

“பூங்கா இதழ்” படிக்க  இங்கே தொடுங்கள்! (Click here)

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்